/tamil-ie/media/media_files/uploads/2019/08/run-serial.jpg)
ரன் சீரியல்
Sun TV Run Serial: சன் டி.வி-யில் ஒளிபரப்பான ’தெய்வ மகள்’ தொடரில், பிரகாஷாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற கிருஷ்ணா, தற்போது ’ரன்’ சீரியலில் நடித்து வருகிறார்.
டைட்டிலுக்கு ஏற்றபடி தற்போது தான் இந்த சீரியல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. ஆர்.கே.என்று அழைக்கப்படும், டாக்டர் ராதா கிருஷ்ணன், பெரும் பணக்காரர். பிரபல ஆஸ்பிடலின் நிர்வாகி. இப்படி இருந்தும் அவருக்கு பல கஷ்டங்கள், மற்ற டாக்டர்கள் மற்றும் நர்ஸுகளுக்கு கூட சம்பள பாக்கி வைத்திருக்கிறார்.
ஆர்.கே . தனது இரண்டாவது மகள் திவ்யாவை நன்றாக படிக்க வைத்து, இண்டெர்ன்ஷிப்புக்காக ஹாங்காங் அனுப்பி வைக்கிறார். அவள் திரும்பி வரும் போது, 6 மாதமாக ஆடி காருக்கு அப்பா டியூ கட்டவில்லை என்ற பிரச்னை எழுகிறது. தனது ஆடி காரை சீஸ் செய்த சக்தி, அப்பாவின் காருக்கும் டியூ கட்டலை , உங்களுக்கு கார் வாங்கினா டியூ கட்டும் வழக்கமே கிடையாதுன்னு கிண்டல் செய்கிறான். அதற்கு முன்பு தான் எல்லாத்தையும் நீ பார்த்துக்கோம்மா. எனக்கு வெளியில அவசர வேலை இருக்குன்னு சொல்லிட்டு போறார், ஆர்.கே.
மறுநாள் ஸ்டேஷனில் அப்பாவை காணோம் என்று திவ்யாவும், கட்டிக்கப் போற பெண் கேரோலினை காணோம் என்று சக்தியும் போலீஸில் புகார் செய்ய வருகிறார்கள். இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால் ஆர்.கே. கேரோலின் இருவருமே பிணமாகக் கிடைக்கிறார்கள். அப்பாவை ரொம்ப நம்பி இருந்த திவ்யாவுக்கு ஹாஸ்பிடல் நஷ்டத்தில் இருக்கிறதே என்கிற கவலை. தான் காதலித்த கேரோலின், டாக்டர் என்று ஒரு அடையாள அட்டையை வைத்திருந்தது சக்திக்கு இன்னும் குழப்பத்தைத் தருகிறது.
இப்போது சக்தி, திவ்யா இருவருமே மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.