scorecardresearch

Sun TV Serial; சுந்தரியை பிடிக்க நெருங்கும் கீதா… காரில் எஸ்கேப் ஆன சுந்தரி

Sun tv sundari serial, sundari escape from police and stay in karthik office: சுந்தரியை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் கீதா, ஆபிஸில் சுந்தரியை மறைத்து வைக்கும் கார்த்திக் இன்றைய எபிஷோடில்…

Sun TV Serial; சுந்தரியை பிடிக்க நெருங்கும் கீதா… காரில் எஸ்கேப் ஆன சுந்தரி

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சுந்தரி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

கார்த்திக் வீட்டில் இல்லையா என கிருஷ்ணா, அவன் மாமாவிடம் கேட்க, அவன் சுந்தரியை தேடி போயிருப்பான் என சொல்கிறார் அவர். சுந்தரி காணாமல் போனதை தெரிந்து அதிர்ச்சி ஆகிறான் கிருஷ்ணா.

அடுத்ததாக, கார்த்திக்கு போன் செய்ய டெலிபோன் பூத்க்கு வருகிறாள் சுந்தரி. அங்கு வேலை செய்யும் பையன் சுந்தரி வந்துள்ளதை போலீசுக்கு போன் செய்து சொல்கிறான். முக்கியமான விஷயம் பேச கார்த்திக்கு சுந்தரி போன் செய்ய, அவனோ அங்க நிக்காத, உடனே கிளம்பி தெருமுனையில் உள்ள காரில் போய் ஏறு என சொல்கிறான். டெலிபோன் பூத்க்கு வரும் போலீஸான கீதா சுந்தரி இல்லாததால், அங்கும் இங்கும் தேடுகிறாள். அதற்குள் சுந்தரி ஒரு காரில் ஏறிச் செல்கிறாள். கார்த்திக் அப்பாவுக்கு போன் செய்யும் ராதா, வேலை இருப்பதால் என்ன வர முடியல, சுந்தரியை பத்திரமா பார்த்துக்கோங்க என்கிறாள்.  

கார்த்திக்கும் சுந்தரிக்கு கல்யாணம் நடந்தைப் பற்றி நினைத்து பார்க்கிறார் கார்த்திக்கின் அப்பா.

பின்னர் கார் டிரைவருக்கு போன் செய்யும் கார்த்தி, சுந்தரியை சரியா ஆபிஸ்ல இறக்கிவிட்டிங்களா என்றும் வேறு எதுவும் பிரச்சனையா என்றும் கேட்டு தெரிந்து கொள்கிறான். சுந்தரி காணாமல் போனது தெரிந்து வருத்தப்படுகிறாள் மாலினி. டென்ஷனாக கிருஷ்ணாவிடம் கார்த்திக்க்கு போன் பண்ண சொல்கிறாள். ஆனால் கார்த்திக் போனை எடுக்கவில்லை. சுந்தரிக்கு எதுவும் தெரியாது, அவ என்ன பண்றாளோ என நினைத்து புலம்புகிறாள் மாலினி. பின்னர் சுந்தரி, மாலினிக்கு பழனியை காதலிக்கும் விஷயத்தில் தன்னை மாற்றியதை நினைத்து பார்க்கிறாள் மாலினி.

கார்த்திக் போன் செய்யும் கிருஷ்ணா, விளம்பர பட வேலை பற்றி கேட்டுவிட்டு, எங்கே இருக்க என கேட்கிறான். அதற்கு ஆபிஸ்ல தான் என கார்த்திக் சொல்ல, நா அங்க எல்லா ஆர்ட்டிஸ்ட் கூட வந்துடுறேன், ஒரு சின்ன ஆடிசன் டெஸ்ட் வச்சிடலாம் என்கிறான் கிருஷ்ணா. இன்னைக்கு வேணாம் என மறுக்கும் கார்த்திக், எனக்கு உடம்பு சரியில்ல நா வீட்டுக்கு கிளம்புறேன் என சொல்றான். சரி அப்ப நா ஆடிசன் பண்றேன் என கிருஷ்ணா சொல்ல அதெல்லாம் வேணாம் என மறுக்கிறான் கார்த்திக். சுந்தரி ஆபிஸில் இருப்பதால் கிருஷ்ணாவ ஆபிஸ் பக்கம் வர விடக்கூடாது என முடிவு செய்கிறான் கார்த்திக் இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sun tv serial sundari today episode sundari escape from police stay in karthik office