Actor livingston daughter jovitha Tamil News: தமிழில் சொல்லாமலே, விரலுக்கு ஏத்த வீக்கம், உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவருக்கு ஜோவிதா என்ற மகள் இருக்கிறார். தற்போது நடிகையாக மாறியுள்ள இவர் ‘கலாசல்’ என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளிவராத நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகாமல் பொறுமை காத்து வருகிறார்.

இதற்கிடையில் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்தார். நடித்த சில மாதங்களிலேயே அந்த சீரியலில் இருந்து விலகியதாக அறிவித்தார். இது குறித்து அப்போது பேசிய நடிகர் லிவிங்ஸ்டன், சீரியலில் இருந்து தனது மகள் விலக நிறைய காரணம் உள்ளது எனவும், அதை சொல்லி அவர்களை தான் நோகடிக்க விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜோவிதா மீண்டும் சன் டிவியின் புதிய சீரியலில் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சீரியலின் ரீமேக்காக உருவாகும் இந்த சீரியலில் ஜோவிதா நடிக்கவுள்ளார் என்றும் அவருடன் கார்த்திக் வாசு மற்றும் நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil