scorecardresearch

அடடே… சன் டிவி சீரியலில் பிக் பாஸ் பிரபலம்; அதுவும் மெயின் கேரக்டராம்!

Poove Unakaga serial actor Srinish Aravind Tamil News: ‘வம்சம்’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமான பிரபல மலையாள நடிகர் ஒருவர் ‘பூவே உனக்காக’ சீரியல் மூலம் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார்.

sun TV serial Tamil News: malayalam Bigg Boss fame actor Srinish Aravind re-entry to Tamil serial Poove Unakaga

sun TV serial Tamil News: சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மனதில் வரவேற்பு பெற்ற ஒன்றாக உள்ளன. குறிப்பாக சன் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்து வந்த அருண் சில நாட்களுக்கு முன்னர் விலகிவிட்ட நிலையில், அவருக்கு பதில் அஸீம் இணைந்தார்.

இந்த நிலையில், இந்த சீரியலில் மற்றொரு பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை வம்சம் சீரியல் நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் தான். இவர் ஏசியா நெட் டிவியில் ஒளிபரப்பாகிய ‘பிராணயம்’ என்ற மெகா தொடரின் மூலம் மலையாளம் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.

பிறகு கடந்த 2017ம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பாகிய ‘வம்சம்’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து மலையாளத்தில் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராகவும் களமிறங்கினார்.

தற்போது சீரியல் மற்றும் படங்களில் பிசியாக வலம் ஸ்ரீனிஷ் பூவே உனக்காக சீரியல் மூலம் தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதை தனது இன்ஸ்டா போஸ்ட் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவரின் என்ட்ரி குறித்த மாஸ் வீடியோ இணைய பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sun tv serial tamil news malayalam bigg boss fame actor srinish aravind re entry to tamil serial poove unakaga