Sun TV Serial Actress Vidhya Pradeep Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நாயகி' சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வித்யா பிரதீப். இவர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சைவம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் பசங்க - 2, 'ஒண்ணுமே புரியல', 'அச்சமின்றி' என பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார்.
மருத்துவத்துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்ற வித்யா, நடிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக திரையில் தோன்ற தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார். அதனால் இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தன. இதற்கிடையில், மாடலாக முன்னணி நிறுவனங்களின் விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.
இவர் மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது வித்யாசமான கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் ஹாலிவுட் நடிகை 'மர்லின் மன்றோ' போன்று உடையணிந்து புகைப்படம் எடுத்துள்ளார். இது அவரது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.
வித்யா வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரை பக்கம் வந்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியல் குடும்ப ரசிகர்களை ஈர்த்துள்ள நிலையில், மீண்டும் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளன. அந்த வகையில் இவர் வசம் பத்துக்கு மேற்பட்ட படங்கள் உள்ளனவாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“