sun TV serial Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ மற்றும் ‘வானத்தைப்போல’ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கருப்பாக உள்ள சுந்தரியை மையமாக கதையமைக்கப்பட்ட ‘சுந்தரி’ சீரியலில் அன்புக்கு அடிப்பவளாய் சுந்தரி உள்ளார். இதே போல் ‘வானத்தைப்போல’ சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக வரும் துளசி அவள் அண்ணனுக்கு மட்டும் அடங்கி போகும் பெண்ணாக உள்ளார்.
மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இந்த சீரியல்களில் புதிய திருப்பமாக, இவை இரண்டும் அடுத்த வாரம் ஒன்றாக இணைந்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளன. இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில், இந்த ‘மகா சங்கமம்’ இரவு 7 மணி முதல் 8 மணி வரை தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் இந்த மகா சங்கமத்திற்கான ப்ரோமோவில் சுந்தரியை சில ரௌடிகள் தாக்க வருகின்றனர். அப்போது வானத்தைப்போல சீரியல் துளசி அவர்களை அடித்து பறக்கவிட்டு தூள் செய்கிறார்.

தொடர்ந்து சுந்தரி – துளசி இருவரும் வரும் ரௌடிகளை அடித்து தும்சம் செய்வது போல கட்சி அமைக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த வரும் ஒளிபரப்பாகும் இந்த மகா சங்கமத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.
இனி அடி.. சரவெடி..
— Sun TV (@SunTV) July 6, 2021
சுந்தரி மற்றும் வானத்தைப்போல துளசி ஒன்றிணையும்
மகாசங்கமம்! ஒரு மணிநேர ஸ்பெஷல்.
வரும் திங்கள் முதல் இரவு 7 மணிக்கு.#SunTV #Sundari #Vanathaipola #MahasangamamOnSunTV pic.twitter.com/0HLUb93sJj
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“