Sun TV serial update Tamil News: இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் மற்றும் பாதிப்பு சற்று உயர்ந்தே காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று (மே 24ம் தேதி) முதல் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இக்கட்டானா சூழலில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் கடந்த மே 10 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது சீரியல் படபிடிப்புகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கு கொரோனா கட்டுப்பாடுகளுடன் 60 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதோடு படப்பிடிப்புக்கு பிறகான போஸ்ட ப்ரொடக்சன் பணிகளையும் நடத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பை முடித்த சில திரைப்படங்கள் நேரடியாக OTT பிளாட் பார்மில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றன.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்ட சின்னத்திரை ஷூட்டிங்கில் நடித்த பல சீரியல் பிரபலங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் குறிப்பாக சன் டிவி சீரியல் பிரபலங்கள் பலருக்கு உறுதி செய்யப்பட்டது. மேலும் 'அன்பே' சீரியலில் நடித்து வந்த ஹீரோ – ஹீரோயின் இருவருக்குமே ஷூட்டிங் நடந்த போதே கொரோனா தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டது. இது அந்த சீரியல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு இதுகுறித்து டெக்னிஷன் ஒருவர் பேசிய ஆடியோ சமீபத்தில் வைரலானது.
தற்போது தளர்வுகள் இல்லாத ஊரடங்காள் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலயில், முன்னணி சேனல்கள் பல பழைய சீரியல்களின் 'சிடி' - களை தூசி தட்டி எடுத்து ஒளிபரப்ப துவங்கியுள்ளன. அந்த வகையில், சின்னத்திரையில் தொடர் ஆதிக்கத்தை செலுத்தி வரும் சன் டிவி 'ஜோதி' என்ற புதிய சீரியலை கையில் எடுத்துள்ளது. இந்த புத்தம் புதிய தொடர் வரும் மே 29 முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமை ஒளிப்பரப்பாக உள்ளது.
ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் ஒரு 'டப்' செய்யப்பட்ட சீரியல் ஆகும். அதோடு இதன் 25 எபிசோடுகள் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பட்டு பின்னர் நிறுத்தபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)