ராஜகுமாரன்தான் மாப்பிள்ளையா வருவார்னு அப்பா ஏமாத்தறாரா?

Sun Tv Show Today: இன்னும் கோவத்தை எகிற வைக்கிறார். பொண்ணு சம்பாத்தியத்துல குடும்பம் நடத்தறது அவ்ளோ பெரிய தப்பு ஒண்ணும் இல்லையே…

Sun Tv Serial, Sun Tv Tamil Serial, Sun Tv chocolate serial, Sun Television Show, தமிழ் டிவி சீரியல், சன் டிவி சீரியல்

Sun TV Serial: தொலைக்காட்சிகள் மொத்த லாக்டவுனுக்குப் பிறகு இப்போது விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளுடன் சீரியல்கள் ஷூட்டிங் துவங்கிவிட்டன. இந்த நிலையில் தொலைக்காட்சிகள் இந்தந்த சீரியல்கள் என்று மக்களுக்கு நினைவு படுத்த அவ்வப்போது விரைவில் பார்க்கலாம் என்று சீரியல்களின் பழைய காட்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றன.


அந்த வகையில் சன் டிவியின் சாக்லேட் சீரியல் காட்சியும் இடம் பெற்று உள்ளது. கருப்பு பெண் இனியா.. இவளது சாக்லேட் சுவீட் செய்யும் திறன் என்று கான்செப்ட் வைத்து சீரியலாக்கி சன் டிவி ஒளிபரப்பு செய்து வருகிறது. சாக்லேட் கருப்பு நிறத்தில் இருக்கும்.. அதை செய்யும் இனியா கருப்பு பெண். இனியாவை பார்த்துவிட்டு போன மாப்பிள்ளைகள் போயி பதில் சொல்லுகிறோம்னு சொல்லிட்டு எந்த பதிலும் சொல்லலையாம். அதனால் ஒரு சிறப்பு மாப்பிள்ளையோட வந்து இருக்கேன்னு உள்ளே நுழைகிறார் தரகர்.

இனியாவின் அப்பாவும், அம்மாவும் ஆசையா, எங்கே மாப்பிள்ளை போட்டோவை முதலில் காட்டுங்க என்று கேட்கிறார்கள். தரகர் செல்போனில் இருக்கும் போட்டோவை காண்பிக்க அதிர்ச்சியாகிறார்கள் இருவரும். மாப்பிள்ளைக்கு இனியாவை கம்பேர் பண்ணும்போது அதிக வயசு இருக்கும் போலிருக்கே என்று கேட்க. அதிகமில்லைங்க…42 வயசுதான்னு அலட்சியமா சொல்றார் தரகர்.

42 வயசா என்று அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், இதென்னங்க பிரமாத வயசு … பணக்காரங்க மத்தியில் வயசெல்லாம் ஒரு முக்கிய விஷயமே இல்லைன்னு சொல்லறார். இதைவிட இன்னும் ஒரு படி மேலே போயி, ஒரு அஞ்சு வயசில் ஒரு குழந்தை இருக்கு அவ்ளோதான்னு மறுபடியும் அசால்ட்டா சொல்றார் . வருது பாருங்க கோவம்…பெண்ணைப் பெற்ற அப்பாவுக்கு.

யோவ்.. எழுந்திரிய்யா.. வெளியில் போ என்று துரத்திக்கொண்டே வெளியில் வருகிறார். என்னய்யா பெரிசா பேசறே? உன் பொண்ணை பார்த்த மாப்பிள்ளை எல்லாம் பொண்ணை பார்த்துட்டு வேணாம்னுதானே போறாங்க. நீதான் உன் பொண்ணுக்கு ராஜகுமாரன் மாப்பிள்ளையா வருவான்னு ஏமாத்தி வச்சு இருக்கே,. உனக்கே தெரியும்.. உன் பொண்ணுக்கு இப்படி ஒருவன்தான் மாப்பிள்ளையா வருவான்னு..அப்புறம் ஏன்யா உன் பொண்ணை ஏமாத்துறே. என்று கத்துகிறார்.

எனக்கு தெரிஞ்சு போச்சு.. உன் பொண்ணு செய்யும் சாக்லேட் சுவீட்னாலதான் உன் பேக்கரி பிழைப்பு ஓடுது… அதுக்குத்தான் உன் பெண்ணை கட்டிக்கொடுக்க மாட்றேன்னு இன்னும் கோவத்தை எகிற வைக்கிறார். பொண்ணு சம்பாத்தியத்துல குடும்பம் நடத்தறது அவ்ளோ பெரிய தப்பு ஒண்ணும் இல்லையே… ஏன் இப்படி எல்லாம் பேசுறாங்க என்று பார்க்கும் மக்களுக்கு கோவம் வரத்தான் செய்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv show today chocolate serial tamil news

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express