சன் டிவியில் 'சிங்கப்பெண்ணே' சீரியலின் ஹீரோ நடிகரும் விஜய் டிவி சீரியல் நாயகியும் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் கிரீன் சிக்னல் காட்டியதைத் தொடர்ந்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கப்பெண்ணே' சீரியல் தொடங்கிய ஒரே மாதத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் டி.ஆர்.பி-யில் முதல் 3 இடங்களில் இடம்பிடித்து சீரியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிங்கப்பெண்ணே சீரியலில் ஹீரோவாக அமல் ஜித் நடித்து வருகிறார். இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே சீரியலில் பானு கதாபாத்திரத்தில் நடித்து வந்த பவித்ரா அரவிந்த் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சன் டிவியில் சிங்கப்பெண்ணே சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் அமல் ஜித், ஏற்கனவே கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அம்மன்' என்கிற சீரியலில் நடித்து, மிகவும் பிரபலமானவர். இந்த சீரியலில் அமல் ஜித்க்கு ஜோடியாக பவித்ரா அரவிந்த் நடித்து வந்தார்.
இருவரும் ‘அம்மன்’ சீரியலில் ஜோடியாக நடித்து கொண்டிருக்கும் போது காதல் மலர்ந்தது. இவர்கள் இருவருமே சமீப காலமாக, காதலை உறுதிப்படுத்தும் விதத்தில், சமூக வலைத்தளத்தில் விதவிதமான ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமல் ஜித் - பவித்ரா அரவிந்த் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இருவருடைய பெற்றோர்களும் குடும்பத்தினரும் திருமணத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்ஹ்டு சம்மதம் தெரிவித்துவிட்டதால் அமல் ஜித் - பவித்ரா அரவிந்த் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இருவரின் திருமணம் குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீரியலில் ஜோடியாக இணைந்து நடித்து, நிஜவாழ்க்கையிலும் இணைய உள்ள அமல் ஜித் - பவித்ரா அரவிந்த் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“