Alauddin Serial on Sun TV: தொலைக்காட்சி ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான நிகழ்ச்சியைத் தருவதற்காக அடிக்கடி தனது நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது சன் டி.வி.
Advertisment
அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக, ஞாயிறு காலை 9 மணிக்கே திரைப்படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. தற்போது பழையபடி மீண்டும் சீரியலை ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறது. ’அலாவுதீன்’ என்ற அந்த சீரியலின் ப்ரோமோவையும் சன் டிவி வெளியிட்டுள்ளது. ப்ரோமோவைப் பார்த்தாலே இது டப்பிங் சீரியல் என்பது உறுதியாக தெரிகிறது.
“அநீதியை எதிர்த்துக் கேட்கும் நாயகன். மோதலையும் காதலாக்கும் அற்புதன். எதிரிகளை ஏமாற்றி தப்பிச் செல்லும் தந்திரக்காரன். எதையும் தைரியமாக எதிர் கொள்ளும் அசாத்திய இளைஞன் - அலாவுதீன்” என்று அதன் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது
Advertisment
Advertisements
தவிர, இமான் அண்ணாச்சி நடத்தி வந்த ”சொல்லுங்கண்ணே சொல்லுங்க” மற்றும் ”குட்டிச் சுட்டீஸ்” ஆகிய நிகழ்ச்சிகளையும் சமீபமாக சன் டி.வி-யில் பார்க்க முடியவில்லை. சினிமாவில் அண்ணாச்சி பிஸியாகி விட்டதால், தொலைக்காட்சியில் தோன்ற முடியவில்லையா எனத் தெரியவில்லை. இதற்கிடையே 1 மணி நேரம் சீரியல் ஒளிபரப்பினால் மீதமிருக்கும் 2 மணி நேரத்தை என்ன செய்யப் போகிறார்கள் என்ற் எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.