tamil serial video, sun tv tamil serial, sun tv tamil serial video, சன் டிவி சீரியல், தங்கம், ரம்யா கிருஷ்ணன்
Thangam Serial on Sun TV: மக்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட தங்கம் சீரியல், சன் டிவியில் இன்று மதியம் 3 மணிக்கு மறு ஒளிபரப்பாகியது. லாக்டவுன் இருக்கும் இந்த நேரத்தில் சீரியல்கள் ஷூட்டிங் இல்லாமல், சீரியல்கள் ஒளிபரப்பு நின்று போயுள்ளன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இதனால் ஒளிபரப்ப முடியாமல் போன நிலையில், தொலைக்காட்சிகள் பழைய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை எடுத்து மறு ஒளிபரப்பு செய்யத் துவங்கி இருக்கின்றன.
சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து ரொம்பவும் வெற்றிகரமாக ஓடிய சீரியல் தங்கம். இதில் நடிகர் விஜயகுமார் முதன்முறையாக சின்னத்திரை நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். இவருடன் நடிகை சீமா, மஞ்சு பார்கவி, காவேரி உள்ளிட்டவர்களும் நடித்து இருந்தனர். ரம்யா கிருஷ்ணன் தங்கவேட்டை என்கிற சன் டிவியின் ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு இந்த சீரியலில் நாயகியாக நடிக்க ஆரம்பித்து மக்களின் மனதில் வரவேற்பைப் பெற்றார்.
Advertisment
Advertisements
இதே பரபரப்போடு இப்போது மீண்டும் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் இந்த தருணத்தில் வேறு வழியின்றி இந்த சீரியலுக்கு ஆதரவை தந்து தொடர்ந்து பார்த்தும் வருவார்கள். பலர் மறுபடியும் மொதல்ல இருந்தா என்று கேட்டாலும், வீட்டில் இல்லத்தரசிகளின் விருப்பம் இந்த சீரியலாக இருக்கும் பட்சத்தில் வேறு வழி இல்லை. சன் டிவியின் இரு துருவங்களாக இருந்து ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன் சீரியல்கள் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் ரசித்த காலம் அது.