Advertisment

சன் டிவியில் ஒரே நேரத்தில் முடிவுக்கு வரும் 3 முக்கிய சீரியல்கள்? ரசிகர்கள் வருத்தம்

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் 3 முக்கிய சீரியல்கள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
sun tv 3 serials end

சன் டிவியில் ஒரே நேரத்தில் முடிவுக்கு வரும் 3 முக்கிய சீரியல்கள்?

Sun TV Serials: சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் 3 முக்கிய சீரியல்கள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Advertisment

தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் சன் டிவி சீரியல்கள் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் டிவி என போட்டிகள் அதிகரித்தாலும் சன் டிவி சீரியல்கள் ஒவ்வொரு வாரமும் டி.ஆர்.பி-யில் ஆதிக்கம் செலுத்த தவறியதில்லை.

இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் 3 முக்கிய சீரியல்கள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். அதில், சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலும் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியல், செவ்வந்தி சீரியல் மற்றும் அன்பே வா சீரியல் என 3 முக்கிய சீரியல்களும் முடிவுக்கு வர இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

மிஸ்டர் மனைவி சீரியல், அன்பே வா சீரியல் மற்றும் செவ்வந்தி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். 

சன் டிவி இந்த மூன்று சீரியல்களையும் முடிவுக்கு கொண்டுவருவதற்கு காரணம், மிஸ்டர் மனைவி சீரியல் மற்றும் அன்பே வா சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங் குறைய தொடங்கியதே காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சன் டிவியில் இந்த மூன்று சீரியல்களுக்கு பதிலாக எந்தெந்த சீரியல்கள் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த மூன்று சீரியல்கள் முடிவு குறித்து சன் டிவி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் புதிய சீரியலுக்கான புரோமோவும் இன்னும் வெளியாகவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment