sun tv show: சன் டிவியின் வணக்கம் தமிழா ரியாலிட்டி ஷோவில், கல்யாண வீடு சீரியலில் சகுந்தலாவாக நடித்த கீதா கலந்துக்கொண்டார். இவருடன் கலா என்கிற கதாபாத்திரமும் படு ஃபேமஸ். இருவரையும் கலா சிஸ்டர்ஸ் என்று செல்லமாக அழைப்பார்கள். இருவரும் புறணி பேசியே பெயர் வாங்கும் கேரக்டர்ஸ் .என்பது கூடுதல் சிறப்பு.ஸ்டார்ட், கேமிரா, ஆக்ஷன் என்றே பழக்கப்பட்டு இருந்துவிட்டு, இப்போது லாக்டவுன் காலம் ரொம்பவே ஏக்கம் கொள்ள வைக்கிறது என்று கீதா கூறினார். இயக்குநர் இமயம் பாரதிராஜா அறிமுகத்தில் நடிக்க வந்து, கே.பி.சார் புரடக்ஷனிலும் நடித்து மோதிரக் கையால் குட்டுப்பட்ட நடிகை என்கிற பெருமை தனக்கு உள்ளது என்றும் கூறினார்.
Advertisment
முதன் முதலில் சன் டிவியின் பொன்னூஞ்சல் சீரியல் மூலம் வந்து, இன்றுவரை சன் டிவி சீரியல்களில் வரிசையாக வாய்ப்பு கிடைத்து, சன் இல்லேன்னா எனக்கு வின் இல்லை என்றும் கூறினார் கீதா. கல்யாண வீடு சீரியலில் டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் ஒரே ஒரு டயலாக் சொல்ல வராமல் 25 டேக் போயிருச்சு...என்னடா இது என்று திருமுருகன் சலிச்சுக்கிட்டார். அன்னிக்கு அந்த சீன் ஷூட் பண்ண முடியலை. ராத்திரி எனக்கு தூக்கம் வரல..மோதிரக் கையில் குட்டுப்பட்டு நடிக்க வந்தோம்...இயக்குனர் இமயம் பாரதிராஜா சரால், கள்ளிக்காட்டில் வளர்க்கப்பட்ட முள்ளுச் செடி. நாம்..இந்த காட்சியில நடிக்க முடியாமல் போகுமா..நாளைக்கு எப்படியாவது நடிச்சு அசத்திரணும்னு நினைச்சுகிட்டே தூங்கினேன்...
மறுநாள் நல்லா நடிச்சுட்டேன்...திருமுருகன் சார் ஷோல்டரில் தட்டிக் குடுத்து, ஃபார்முக்கு வந்துட்டீங்க என்று சொல்லி பாராட்டினார் என்றார்..சன் டிவியின் ராசாத்தி சீரியலில் நடிகர் செந்திலின் மனைவியாக நடித்து வருகிறார். ராசாத்தி சீரியலில் நடிக்கும் விசித்திராவை ரொம்ப பிடிக்கும். முத்து படத்தில் நடிக்கும்போது அவரை பார்த்து இருக்கேன். லட்டு மாதிரி இருப்பார்...இப்போதும் பழகுவதற்கு இனிமையானவர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறைய பேருக்கு உணவு கொடுத்தோம்..அப்படி உணவு கொடுக்க, விசித்திராவிடம் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று கேட்டபோது, உதவி செய்தார். இன்னும் உதவி தேவை என்றால் கேளுங்க என்றும் சொன்னாராம் விசித்திரா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil