”என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா

அவரை குறை சொல்வதை விட, அவரோட கஷ்டத்தில் நானும் பங்கெடுக்க வேண்டுமென நினைத்தேன். இரண்டு பேரும் சேர்ந்து ஹார்டு வொர்க் பண்ணிணோம்.

VJ Aishwarya Prabhakar : சன் தொலைக்காட்சியில் ’சூப்பர் குடும்பம்’, ‘சன் சிங்கர்’, ‘சன் குடும்ப விருதுகள்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஐஸ்வர்யா பிரபாகர். சன் டிவி-யில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலில் திரெளபதியாகவும் நடித்திருந்தார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘ஜோடி 3’ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடனம் ஆடினார். இவர்கள் இறுதிப் போட்டிக்கும் தேர்வானார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் உட்பட சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். அதன்பிறகு திருமணம் செய்துக் கொண்ட ஐஸ்வர்யா, அமெரிக்கா பறந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தனது ட்ரான்ஸ்பர்மேஷன் (உடல் எடைக்குறைப்பு) வீடியோவை வெளியிட்டிருக்கும் ஐஸ்வர்யா, அமெரிக்காவில் தான் எதிர்க்கொண்ட பிரச்னைகள் குறித்தும் தெரியப்படுத்தியுள்ளார்.

’16 வயதிலேயே டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்த எனக்கு 24 வயதில் திருமணமானது. வீட்டில் பார்த்த அரேஞ்சுடு மேரேஜ். கல்யாணத்துக்கு அப்புறம்தான் நாங்கள் ஒருத்தரையொருத்தர் தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை. அவரை மட்டுமே நம்பி அமெரிக்காவுக்குப் போனேன்.

அங்கே வாழ்க்கை நிறைய ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் எனக்கு வைத்திருந்தது. அங்கே சென்ற பிறகு தான், பொருளாதாரரீதியா என் கணவர் ரொம்ப மோசமான நிலைமையில் இருப்பது எனக்கு தெரிய வந்தது. அவரோட பணத்தையெல்லாம் அவருடைய சொந்தக்காரர்களே ஏமாற்றியிருந்தார்கள். பேங்க் அக்கவுண்ட் திவால். திருமணம் முடிந்த ஒரு வருஷம் முழுக்க ஹனிமூன் பீரியட்னு சொல்வார்கள். ஆனா, எங்களுக்கு அது ரொம்ப குழப்பமான பீரியட்.

அவரை குறை சொல்வதை விட, அவரோட கஷ்டத்தில் நானும் பங்கெடுக்க வேண்டுமென நினைத்தேன். இரண்டு பேரும் சேர்ந்து ஹார்டு வொர்க் பண்ணிணோம். கொஞ்சம் கொஞ்சமா எங்களது எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீண்டு வந்தோம். அதிக பிரச்னைகளை சந்தித்ததாலும், மரபியல் காரணங்களாலும் என் உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்தது.

பிரச்னைகள் ஓரளவு குறைய ஆரம்பிக்கும் போது, உடலிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்தேன். ஒர்க் அவுட், டான்ஸ், சரிவிகித உணவு என அனைத்தையும் ஃபாலோ செய்தேன். மாற்றம் தெரிந்தது. டபுள் எக்ஸெல்லில் இருந்த உடல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. அமெரிக்காவில் மாடலிங் மற்றும் நடிப்பை தொடர ஆரம்பித்தேன். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஒர்க் அவுட் செய்ய கற்றுக் கொண்டேன். வார இறுதியில் கணவருடன் டென்னிஸ் விளையாடுவேன். 86 கிலோவிலிருந்து இப்போது 61 கிலோவுக்கு குறைந்துள்ளேன்.” என அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.

கணவருக்கு இத்தனை பக்க பலமாக இருந்து, பிரச்னைகளை சமாளித்து, கடின முயற்சியால் தன் உடலை குறைத்திருக்கும் அவருக்கு “வாவ் ஸோ கிரேட்” போன்ற மெஸ்ஸேஜ்களை தட்டிவிடுகிறார்கள் ரசிகர்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close