scorecardresearch

‘குஷ்பூ வராம இருந்திருந்தா இந்த நடிகைக்கு ப்ரொபோஸ் பண்ணி இருப்பேன்’: சுந்தர் சி

இயக்குநர் சுந்தர்சி, தனது படத்தில் நடித்த நடிகைகள் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

சுந்தர் சி

இயக்குநர் சுந்தர்சி, தனது படத்தில் நடித்த நடிகைகள் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் பகிருந்து கொண்ட தகவல் பின்வருமாறு: “நடிகை திரிஷாவுடன் பணியாற்ற வேண்டும் என்று பல நாள் நினைத்திருக்கிறேன். மேலோட்டமாக பார்த்தால், திரிஷா ஈடுபாடு இல்லமால் இருப்பது போலத் தோன்றும். ஆனால் அவர் மிகவும் நெயர்த்தியானவர் அவரிடத்தில் குறைகள் இல்லை.

நடிகை ரம்பாவிடம் சில குறைகள் இருந்தது, ஆனால் அவர் அதை கடின உழைப்பால் மாற்றிக்கொண்டார். அவர் ஹீல்ஸ் அணிந்து நடந்து வந்தாலே ஆளே மாறிவிடுவார். நான் வேலை செய்த கதாநாயகிகளில் நன்றாக நடனமாடக் கூடியவர்.  இந்நிலையில் அவருக்கு அதிகமாக கோவம் வரும் அதை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நடிகை ஓவியாக மிகவும் அமைதியானவர். நான் பார்த்து பழகிய ஓவியா மிகவும் தன்மையான குணம் கொண்டவர். இப்போது அறியப்படும் ஓவியாவுக்கும் எனக்கு தெரிந்த ஓவியாவுக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது.

சௌந்தர்யா எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை. இதுவரை நான் எங்கும் சொன்னதில்லை. ஒருவேளை என் வாழ்க்கையில் குஷ்பூ வரவில்லை என்றால், இவரிடம்தான் என் காதல் சொல்லிருப்பேன். அப்படி ஒரு தங்காமான குணம். .இவரது அண்ணா இவரை விட்டி எங்குமே நகரமாட்டார். இருவருமே ஒன்றாகத்தான் மரணமடைந்தனர்” என்று அவர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sundar c about his favourite actress