நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி தனது மனைவி குஷ்பு, மகள் மற்றும் உறவினர்களுடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தார். தனது, 25-ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அன்னதானத்திற்கு நன்கொடை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள மலைக்கோயில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக பிரசித்தி பெற்றது. நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி மற்றும் அவரது மனைவி நடிகை குஷ்பூ தனது மகள் மற்றும் உறவினர்களுடன் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சென்று தனது 25-ம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடும் விதமாக, நடிகர் சுந்தர் சி மொட்டை அடித்து முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். பூஜைகளில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுந்தர் சி - குஷ்பு தம்பதிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டன. சுந்தர் சி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை வழங்கப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவை பார்த்த, கோயிலுக்கு வந்த பக்தர்கள் இவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
சுந்தர் சி கடைசியாக இயக்கிய அரண்மனை 4 திரைப்படமும், நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்து ரீலீசான மதகஜராஜா திரைப்படமும் பெரிய வெற்றி பெற்றது.
இதையடுத்து, சுந்தர் சி 'மூக்குத்தி அம்மன் 2' படத்தினை இயக்கவுள்ளார். அண்மையில், இந்த இந்த படத்தின் பூஜை நடந்தது. இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'மூக்குத்தி அம்மன்' 2ம் பாகம் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.