/indian-express-tamil/media/media_files/2025/07/03/sundar-c-childhood-photos-tamil-news-2025-07-03-14-53-44.jpg)
மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வு, குடும்பங்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் படங்கள் என தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் பார்க்கும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கமர்சியல் வெற்றி படங்களாக அமைந்தது.
குறிப்பாக கார்த்திக்,சுந்தர் சி காம்போ வில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. முறைமாமன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி அதைத் தொடர்ந்து இயக்கிய முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன்,நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத்தேடி, உனக்காக எல்லாம் உனக்காக என சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், சத்யராஜ் ,சரத்குமார் ,மாதவன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் சுந்தர் சி இப்போது தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்து கொண்டு உள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து இப்போது பிரபலமான நடிகராகவும் உள்ளார்
சுந்தர் சி மற்றும் குஷ்பூ இணைந்து அவ்னி மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களையும் தயாரித்து வருகின்றனர். அரண்மனை முதல் இரண்டு பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அரண்மனை மூன்றாவது பாகத்தையும் சுந்தர் சி இயக்கி இருந்தார் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை
பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள சுந்தர் சி விஜயகாந்துடன் ஏன் இணைந்து பணியாற்றவில்லை என்ற காரணத்தை மேடையில் ஓப்பனாக பேசியுள்ளார்.
"தமிழில் 8 நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன் அதில் 7 நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிவிட்டேன் அதில் விஜயகாந்துடன் மட்டும் இன்று வரை பணியாற்றும் வாய்ப்பே கிடைக்கவில்லை. காரணம் எனக்கு கதை ஒழுங்காக சொல்லத் தெரியாது விஜயகாந்த் கதையை முழுசாக கேட்காமல் நடிக்க மாட்டார். இதனாலேயே விஜயகாந்தை இயக்க முடியாமல் போனது." என மேடையில் ஓப்பனாக சுந்தர் சி பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.