scorecardresearch

தமிழ் சினிமாவில் மாட்டிக் கொண்ட பேய்கள்: வந்தது காஞ்சனா 3, வரப்போறது அரண்மனை 3!

Sundar C’s Aranmanai 3: காஞ்சனா 3-யை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

sundar c directs aranmanai 3 soon

Sundar C’s Aranmanai 3: தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால் 4 பாகங்களைக் கொண்ட ஒரே தமிழ் படம் முனி வரிசையில் வந்த காஞ்சனா தான். இதனை முனி 4, காஞ்சனா 3 என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

காஞ்சனா 3-யைப் பொறுத்தவரை இதற்கு முந்தைய பாகங்களை விட, இதில் விறுவிறுப்பு குறைவு, புதிதாக ஒன்றுமில்லை என்பது தான் பலரின் கருத்து. இதன் அடுத்த பாகம் வேறு வரவிருக்கிறது.

இதற்கிடையே மற்றுமொரு ஹாரர் படமான அரண்மனை படத்தில் 2 பாகங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. தற்போது இதன் 3-ம் பாகத்தையும் இயக்க திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் சுந்தர் சி.

தற்போது விஷாலை வைத்து பெயரிடப் படாத படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கும் அவர், இதனை முடித்து விட்டு, அரண்மனை 3-யின் வேலைகளை துவங்க இருக்கிறாராம்.

காஞ்சனா 3-யை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில காலங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவை ஹாரர் படங்கள் ஆட்டிப் படைத்தன. அப்பாடா இந்தக் கலாச்சாரம் மங்கிவிட்டது என நினைக்கும் நேரத்தில் இப்போது ஹாரர் ப்ளஸ் பார்ட் 2, 3, 4, 5… என அடுத்த பரிணாமத்திற்கு தாவியிருக்கிறது.

அதிலாவது ஏதேனும் புதுமைகள் இருக்குமா என்ற கேள்விக்கு எப்போது தான் பதில் கிடைக்குமோ…

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sundar cs aranmanai 3 kanchana 3 raghava lawrence