சுந்தரி சீரியல் நடிகரை கரம் பிடிக்கும் சன் டிவி கதாநாயகி; கலக்கல் திருமண போட்டோஸ்

சன் டிவி சீரியல் ஹீரோயினை மணக்கும் சுந்தரி சீரியல் நடிகர்; நிச்சயதார்த்தம் முடிந்ததை தெரியப்படுத்த வெளியிட்ட ஜாலி வீடியோ இணையத்தில் வைரல்

சன் டிவி சீரியல் ஹீரோயினை மணக்கும் சுந்தரி சீரியல் நடிகர்; நிச்சயதார்த்தம் முடிந்ததை தெரியப்படுத்த வெளியிட்ட ஜாலி வீடியோ இணையத்தில் வைரல்

author-image
WebDesk
New Update
arvish harika

சன் டிவி சீரியல் ஹீரோயினை மணக்கும் சுந்தரி சீரியல் நடிகர்; நிச்சயதார்த்தம் முடிந்ததை தெரியப்படுத்த வெளியிட்ட ஜாலி வீடியோ இணையத்தில் வைரல்

சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷ் மற்றும் திருமகள் சீரியல் நடிகை ஹரிகா திருமண நிச்சயதார்த்தம் நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில், ரசிகர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் அரவிஷ். சுந்தரி சீரியலில் சுந்தரியின் அண்ணனாக அரவிஷ் நடித்து வருகிறார். சுந்தரி சீரியலின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் அரவிஷ் நடித்து வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்த அரவிஷ் இப்போது இலக்கியா சீரியலிலும் நடித்து வருகிறார்.

Advertisment
Advertisements

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரவிஷ் மற்றும் ஹரிகா இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர்தான் நடிகை ஹரிகா.

அரவிஷ் மற்றும் ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் பெரியோர்களின ஆசிர்வாதத்தோடு இரு வீட்டு சம்மதத்தோடு நேற்று நடைபெற்றது. இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தத்தில் ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நிச்சயதார்த்தம் முடிந்தது அரவிஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களுக்கு 'என் பொண்டாட்டியை பாக்கணுமா..?' என்ற கேள்வி கேட்டபடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அரவிஷ் மற்றும் ஹரிகா இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இதனையடுத்து ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sun Tv Sundari Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: