Sundari Serial Actress Gabriella Sellus Different Video On Instagram நாம் தான் அவைகளின் உலகமே... உணர்வுகளை தூண்டும் கேப்ரியல்லாவின் வித்தியாசமான வீடியோ | Indian Express Tamil

நாம் தான் அவைகளின் உலகமே… உணர்வுகளை தூண்டும் கேப்ரியல்லாவின் வித்தியாசமான வீடியோ

டிக்டாக் வீடியோ மூலம் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி தற்போது சினிமாவில் நடிகையாக மாறியுள்ள கேப்ரியல்ல சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

நாம் தான் அவைகளின் உலகமே… உணர்வுகளை தூண்டும் கேப்ரியல்லாவின் வித்தியாசமான வீடியோ

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா அவ்வப்போது வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வரும் தற்போது செல்லப்பிராணிகளின் முக்கியத்துவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக வலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் முக்கியமானவர் கேப்ரியல்லா. ரஜினியின் கபாலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து நயன்தாராவின் ஐரா, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

பாசமலர், செத்தும் ஆயிரம் பொன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான கேப்ரியல்லா தற்போது சன்டிவியின் சுந்தரி சீரியல்ல முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். டிக்டாக் வீடியோ மூலம் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி தற்போது சினிமாவில் நடிகையாக மாறியுள்ள கேப்ரியல்ல சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சினிமாவில் நுழைய நிறம் ஒரு தடை இல்லை திறமை இருந்தால் போதும் என்பதை ஆணித்தனமாக நிரூபித்த பெருமை கேப்ரியல்லாவுக்கு உண்டு.

சீரியல் மற்றும் சினிமா என நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் கேப்ரியல்லா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு ஆல்பம் பாடலை பாடியுள்ளார். மேலும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏ.ஆர்.ரஹமான் ஃபாலோயராக உள்ளார். இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது செல்லப்பிராணிகளின் முக்கியத்துவம் குறித்து ஒரு ஷார்ட்ஃபிலிம் போன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. இதில் நாய் மாதிரி கேப்டரியல்லா நடந்துகொள்ள அவரது தோழி வீட்டு எஜமானர் போன்று நடந்துகொள்கிறார். இதில எஜமானர் சொல்வதை எல்லாம் நாய் செய்கிறது. எஜமானர் அதற்கு உணவு கொடுக்கிறர்.

மகிழ்ச்சியாக இருக்கும்போது நாயுடன் விளையாடும் எஜமானர் சோகமாக இருக்கும்போது நாயை விரட்டி அடிக்கிறார். ஆனாலும் நாய் அங்கருந்து போகாமல் அவருடனே இருக்கிறது. அதன்பிறகு நாயுடன் சந்தோஷமாக இருக்கும் எஜமானர் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்து இறந்ததுபோல் இருக்கிறார்.

அப்போது நாய் அதன் முகத்தை வைத்து எஜமானரை எழுப்ப முயற்சி செய்கிறது. சில வினாடிகளுக்கு பிறகு எஜமானர் எழுந்தபோது நாய் மகிழ்ச்சிடைகிறது. கேப்ரியல்லாவும் அவரது தோழியும் சேர்ந்து செய்துள்ள இந்த உணர்வுப்பூர்வமான வீடியோ காட்சி பார்ப்பவர்கள் மனதை நெகிழ வைக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sundari serial actress gabriella sellus different video on instagram