Advertisment

உன் நம்பிக்கையில் உருவான உலகில் நீயே ராணி : சுந்தரி நடிகையின் நியூ ஸ்டைல்

புகைப்படத்திற்கு கமெண்ட் செய்தும் வரும் ரசிகர்கள் கேப்ரியல்லாவின் புதிய தோற்றம் கருத்துக்களை கூறி வருவது வழக்கம்.

author-image
WebDesk
New Update
ஆசைகளும்.. கனவுகளும்... சுந்தரி கேப்ரியல்லாவின் வித்தியாசமான போட்டோஸ்

சன்டிவியின் சுந்தரி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக நடிகை கேப்ரியல்லா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisment

சன் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சுந்தரி. கருப்பாக உள்ள கிராமத்து பெண் சுந்தரியை மையமாக கொண்டு கதைமைக்கப்பட்ட இந்த சீரியலில் நடிகை ‘கேப்ரியல்லா செல்லஸ்’ தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறார்.

publive-image

தனக்கு துரோகம் செய்த கணவன் கார்த்திக்கை அவர் கேட்கும் ஒவ்வொரு வசனமும் சாட்டையடியாக விழுகிறது. தற்போது இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, சுந்தரி சீரியலில் கருப்பு நிற சுத்த கிராமத்து பெண்ணாக நடித்து வரும் கேப்ரியல்லா தற்போது சீரியலில் புதிய லுக்கிற்கு மாறியுள்ளார். தலைமுடி கட் செய்து முகமே வேறொரு நாயகி போல் பார்க்க தெரிகிறது.

publive-image

இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அவரது ரசிர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள். மேலும், இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்தும் வரும் ரசிகர்கள் கேப்ரியல்லாவின் புதிய தோற்றம் மிரட்டலாகவும், அழகாகவும், வேற லெவல் என்றும் ரசிகர்கள் கூறி வருவது வழக்கம்.

publive-image

அந்த வகையில் இவர் தற்போது "உனது நம்பிக்கையில் உருவான உலகில் நீயே ராணி" என்ற தலைப்பில் ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நீங்கள் உண்மையிலேயே ராணி தான் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gabriella Sellus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment