sundari serial Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஒன்றாக உள்ளது. கருப்பாக உள்ள கிராமத்து பெண் சுந்தரியை மையமாக கொண்டு கதைமைக்கப்பட்ட இந்த சீரியலில் நடிகை ‘கேப்ரியல்லா செல்லஸ்’ நடித்து வருகிறார். தனது . திறமையான நடிப்பு மற்றும் களையான முகத்தோற்றம் போன்றவற்றால் அவருக்கென ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

இந்த சீரியலில் கணவனுக்காக உருகும் பெண்ணாக நடித்து வரும் சுந்தரி, தற்போது கணவனைப் பற்றிய உண்மைத் தெரிந்து எரிமலையாக பொங்குகிறார். கணவன் கார்த்திக்கை அவர் கேட்கும் ஒவ்வொரு வசனமும் சாட்டையடியாக விழுகிறது. இனி இருவருக்குள் போர்தான் நடக்கப் போகிறது எனவும், சுந்தரி கணவன் கார்த்திக்கை கதறடிக்கப் போகிறார் என்றும் சுந்தரி சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், சுந்தரியோ கணவர் கார்த்திக் உடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். இந்த ரொமான்ஸ் சீரியலுக்காக இல்லையாம். இன்ஸ்டா ரீல்ஸ்-க்காம். இந்த ரீல்ஸ் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுந்தரி.
அந்த வீடியோவில், “உன்னாலே கண்கள் தள்ளாடி உறங்காமல் எங்கும்என் ஆவி” என்று சுந்தரி பாடுகிறார். அதற்கு கார்த்திக் “நீராவியாய் என்னை நீ மோதினாய் உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்… என்று கார்த்திக் கத்துகிறார். அதைக் கேட்டு ஏன் கத்துற என்று கேட்டு செல்லமாக தட்டுகிறார் சுந்தரி.

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், சீரியலில் சண்டைக்கோழிகளாக இருக்கும் இவர்கள் நிஜத்தில் இப்படி ரொமான்ஸ் பண்றாங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை கேப்ரியல்லா, கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த நடிகை நயன்தாராவின் “ஐரா” திரைப்படத்தில் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். டிக் டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“