பிரபல பாலிவுட் நடிகரும், ஃபிட்னஸ் ஆர்வலருமான சுனில் ஷெட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அண்மையில் சென்னை வந்திருந்தார். சென்னை வந்திருந்த அவர் தமிழ்நாட்டு ரசிகர்கள் பற்றியும், நடிகர் ரஜினிகாந்த் பற்றியும் நெகிழ்ச்சியாக பேசினார்.62 வயதான சுனில் ஷெட்டி ஃபிட்னஸ் ஆர்வலராக கலக்குகிறார்.
சுனில் ஷெட்டி பேசுகையில், “திரையுலகில் 35 ஆண்டுகள் உள்ளேன். 35 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். இந்த துறையில் இருப்பதற்கு ஆசீர்வதிக்கப்பட்டவனான உணர்கிறேன். இவ்வளவு அன்பும் பாசமும் வேறு துறையில் எங்கு கிடைக்கும்?
எனினும் சென்னை வித்தியாசமானது. வேறு எந்த இடத்திலும் இல்லாத அளவுக்கு விளையாட்டு, திரைப்படம் மற்றும் அரசியலில் சாதனை படைத்தவர்களையும் கொண்டாடுகிறது. ராஞ்சியில் இருந்து ஒரு இளம் தோனி தமிழ்நாட்டிற்கு வந்து ‘தல’ ஆகிறார்... இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் ஒரு தனிநபருக்கு இவ்வளவு அன்பையும் நம்பிக்கையையும் கொடுப்பதை நான் பார்க்கவில்லை, ” என்று கூறி நெகிழ்ந்தார்.
/indian-express-tamil/media/media_files/MpTvnmFnth3M7Y8oyaIi.webp)
மேலும் பேசிய அவர், நான் எப்போதும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று இருந்தேன். ஆனால் தர்பார் படம் எனக்கு இதை மாற்றியது. அதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். ஏனென்றால் அதில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தேன்.
ரஜினிகாந்துடன் இருந்த காலம் என்னை ஒரு மனிதனாக நிறைய மாற்றியது. அவர் படப்பிடிப்பில் அனைவரிடமும் பேசுவார், மிகவும் எளிமையாகவும் தன்மையாகவும் நடந்து கொள்வார். ஆனால் அவர் அப்படியே கேமரா முன் ஒரு நடிகராக மாறுவார். மேக்கப் போட்டால் அவர் வேறு நபராவார். அவர் இவ்வளவு சாதித்தாலும் அப்படியே இருக்கிறார். அவருடன் இருந்த அந்த அழகான தருணங்களில் இருந்து என் தனிப்பட்ட வாழ்க்கைக்காக நிறைய கற்றுக்கொண்டேன் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“