’என்னை விவாகரத்து செய்து விட்டார்’: நடிகை மீது அவதூறு பரப்பிய நடிகர் கைது

’1 நெனோக்கடினே’ படத்தில் தான் நடிக்கவிருந்ததாகவும், அதை மகேஷ் பாபு தனது ஸ்டார் பவரால் பறித்துக் கொண்டதாகவும் கூறினார்.

’1 நெனோக்கடினே’ படத்தில் தான் நடிக்கவிருந்ததாகவும், அதை மகேஷ் பாபு தனது ஸ்டார் பவரால் பறித்துக் கொண்டதாகவும் கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sunishith, Lavanya Tripathi

லாவண்யா மீது அவதூறு பரப்பிய சுனிஷித்

நடிகை லாவண்யா திரிபாதி தன்னை திருமணம் செய்துக் கொண்டு, 3 முறை கருக்கலைப்பு செய்ததாக அவதூறு கூறிய, நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீட் பெல்ட் அணியாமல் அபராதம் கட்டிய ரஜினி? சமூக வலைதளங்களில் விவாதம்

Advertisment

தமிழில் சசிகுமாரின் ’பிரம்மன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. ’மாயவன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது அதர்வாவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு யூ-ட்யூப் நடிகர் சுனிஷித் அளித்த பேட்டியொன்றில், 2015-ல் லாவண்யா திரிபாதியை திருமணம் செய்துக் கொண்டதாகவும், தன்னோடு வாழப் பிடிக்காமல் அவர் விவாகரத்து செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதோடு லாவண்யா மூன்று முறை கருக்கலைப்பு செய்துக் கொண்டதாகவும், தமன்னா உள்ளிட்ட மேலும் சில நடிகைகளுடனும் தனக்கு தொடர்பு இருந்ததாகவும் கூறியிருந்தார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை மறுத்த லாவண்யா திரிபாதி மலிவான விளம்பரத்துக்காக தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ள சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த மார்ச் மாதம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். தற்போது சுனிஷித் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா வீட்டை கையகப்படுத்திய தமிழக அரசு: ரூ67.9 கோடி டெபாசிட்

தவிர, ’1 நெனோக்கடினே’ படத்தில் தான் நடிக்கவிருந்ததாகவும், அதை மகேஷ் பாபு தனது ஸ்டார் பவரால் பறித்துக் கொண்டதாகவும் கூறினார். இப்படி பல யூ-ட்யூப் சேனல்களுக்கு அவர் அளித்த நேர்காணல்களில் வேடிக்கையான கருத்துக்களை கூறியதால் சுனிஷித்துக்கு ‘சேக்ரிஃபைஸிங் ஸ்டார்’ என்ற புனைப்பெயரும் கிடைத்தது.

Advertisment
Advertisements

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Telugu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: