Advertisment

என்னதான் நடக்குது? இந்த ’அழகு’ சீரியலில்!

அத்தை அழகு சொல்றாங்க..சுதா நீ உள்ளே போ...பூர்ணா நீ வெளியே போன்னு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Azhagu Serial today

Azhagu Serial today

sun tv azhagu serial: நடிகை ரேவதி நடித்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அழகு. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் அழகு சீரியல், மறுபடியும் முதலில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. ரேவதிக்கு என்று இருக்கும் ரசிகர்கள் சீரியலை ஆரம்பத்தில் பார்க்க ஆரம்பித்து, இப்போது 6:30 மணி ஸ்லாட் என்பதும் மக்கள் டிவி முன் உட்காரும் நேரமாக ஆகி இருக்கிறது.

Advertisment

அழகு சீரியலில் பூர்ணா பெரும் வில்லி..கூடவே இருந்து ஒவ்வொருவருக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்கிறாள். பூர்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சங்கீதாவுக்கு சன் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் இளமையான வில்லி என்கிற விருதும் கிடைத்தது. ரவி அத்தானை கல்யாணம் செய்துக்க விரும்பும் பூர்ணா ரொம்ப சாஃப்ட் பெண். ரவிதான் உனக்கு என்று சொல்லி சொல்லி அவளை வளர்த்த குடும்பமே இப்போ ரவி இல்லேன்னாலும், நீ அடஜஸ்ட் பண்ணிக்கணும் என்று ஜஸ்ட் லைக் தட்னு விட்டுட சொன்னா எந்த பொண்ணுக்குத்தான் கோவம் வராது? அது மட்டும் இல்லைங்க...வீட்டுக்கு விருந்தாளியா வந்த சுதாவை ரவி அத்தான் கல்யாணம் செய்துக்க, அவளை குடும்பமே மருமகள்னு தூக்கிக் கொண்டாடினா...அது இன்னும் கடுப்பேத்தற செயல்தானே...

அப்படித்தான் பூர்ணா நல்ல பெண்ணில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா விடுபட்டு, கொடூரமான பெண்ணாகிப் போகிறாள். சுதாவுக்கு, ரவிக்கும் முதலிரவாம்...அதுக்கு பூர்ணா புருஷன் பூ வாங்கிட்டு வந்து பூர்ணாவை அலங்காரம் செய்ய கூப்பிடறான். முதலில் தாலியை உன் கையால எடுத்துக்கொடு பூர்ணான்னு சொல்லி,, கோயிலில் மாலை மாத்தி முறையா கல்யாணமும் செயது வச்சுட்டாங்க அத்தை அழகம்மை. வீட்டு சாவிக் கொத்துன்னு ஒண்ணை இன்னும் சீரியல் கதைகளில் பிடிச்சுக்கிட்டு போறாங்க பாருங்க...அந்த சாவிக் கொத்தையும் சுதா இடுப்பில் தொங்க விட்டாச்சு. மாலை மாற்றி, கல்யாணம் செய்துகொண்டு வரும் சுதாவுக்கும், ரவி அத்தானுக்கும் பூர்ணா ஆரத்தி எடுக்கணும்னு அத்தை சொல்ல, பாவம் பூர்ணா அதையும் செய்துட்டு நிற்கும்போது...

அத்தை அழகு சொல்றாங்க..சுதா நீ உள்ளே போ...பூர்ணா நீ வெளியே போன்னு.. பார்க்கறவங்களுக்கே திக்குன்னு ஆகுது...அப்புறம் அழகம்மை என்ன சொல்றாங்கன்னா, ஆரத்தியை வெளியில கொட்டிட்டு வான்னு சொல்றதுக்கு இப்படி சொல்றங்களாம்...ஏம்பா, நடிகை ரேவதி மாதிரி ஆட்கள் டயலாக் பேசுவதில் இப்படியா டிவிஸ்ட் வைப்பீங்க?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment