கரிகாலன் முன்னே, ஜனனி பின்னே: ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி ஆகும் எதிர்நீச்சல் நடிகை!

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகை மதுமிதா மற்றும் விமல் குமார் ஆகிய இருவரும் ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளனர்.

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகை மதுமிதா மற்றும் விமல் குமார் ஆகிய இருவரும் ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Karikalan Janani

எதிர்நீச்சல் ஜனனி மற்றும் கரிகாலன்

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், இந்த சீரியலில் நடித்து வந்த நட்சத்திரங்கள் தற்போது ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி ஆக உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. பெண்களின் முன்னேற்றம் மற்றும் ஆணாதிக்கத்தின் அச்சுறுத்தலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கியிருந்தார்.

நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், இந்த சீரியல் நட்சத்திரங்கள் அடுத்து எந்த சீரியலில் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இருவர் ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி ஆக உள்ளனர் இதில் ஒருவர் என்ட்ரி ஆகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒவ்வொன்றிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் அவ்வப்போது புதுப்புது சீரியல்களை களத்தில் இறக்கி வரும் சேனல் நிர்வாகம், அடுத்து அடுத்தடுத்து பல புதிய சீரியல்கள் ஒளிப்பரப்பாக உள்ளன.

Advertisment
Advertisements

இநத வகையில் அடுத்து புதிதாக தொடங்க உள்ள புதிய சீரியலில், எதிர்நீச்சல் நாயகி மதுமிதா முதன்மை கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய எதிர் நீச்சல் சீரியல் பிரபலங்கள் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க உள்ளனர். இந்த புதிய சீரியலின் ஷூட்டிங் இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுமிதா நடிக்கும் சீரியல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என்றுஞ கூறப்படுகிறது. அதேபோல் எதிர்நீச்சல் சீரியலில், கரிகாலன் வேடத்தில் நடித்த விமல் குமார் தற்போது கார்திகை தீபம் சீரியலில் ரம்யாவுக்கு கார்த்திக் ஏற்பாடு செய்த மாப்பிள்ளையாக நடித்து வருகிறார்.  இவரது காட்சிகள் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: