பிரக்னன்ஸியை சஸ்பென்ஸாக கூறிய ரோஜா சீரியல் நடிகை: கணவர் சார்… எமோஷன் போதாது!

Roja serial news: ரோஜா சீரியல் நடிகை ஷாமிலி சுகுமார் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அன்னையர் தினத்தன்று கணவருக்கு சர்ப்ரைஸாக கூறியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே டாப் ரேட்டிங்கில் உள்ளது ரோஜா தான். இந்த சீரியலில் நாயகனாக சிபு சூரியன் என்பவரும் நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த சீரியல் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் ஹிட்டாக முக்கியமான காரணம் இந்த தொடரின் வில்லி ஷாமிலி சுகுமார்தான். வில்லியாக நடித்து பயங்கர வில்லத்தனம் செய்து வருகிறார். நெகட்டிவ் கேரக்டருக்கு கட்சிதமாக பொருந்துகிறார். சன் குடும்ப விருது விழாவில், சிறந்த வில்லிக்கான விருதைப் பெற்றார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த ஷாமிலி, சின்னத்திரையில் நுழைந்து குறுகிய வருடங்களில் 20 சீரியலுக்கு மேல் நடித்து உள்ளார். சீரியல்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்து எடுத்து நடித்து ரசிகர்களிடம் பாப்புலராகியிருக்கிறார். இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா படத்தில் கூட நடித்து இருக்கிறார். ஷாமிலிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கணவருக்கு சர்ப்ரைஸாக கூறியுள்ளார். கடைக்கு சென்று கிஃப்ட் வாங்கி வந்து அதில் பேப்பரில் எழுதி வைத்து சர்ப்ரைஸ் செய்து அசத்தியுள்ளார். அதுவும் அன்னையர் தினத்தில் ஷாமிலி பிரக்னன்ஸி பற்றி கூறியது கணவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஷாமிலி.

ஷாமிலியின் இந்த வீடியோ பதிவுக்கு ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv roja serial actress shamili sugumar announced her pregnancy surprise video

Next Story
பிரசவத்தின் போது எடை அதிகரிப்பு, கொரோனா… சோதனைகளில் இருந்து சமீரா மீண்ட கதை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com