By: WebDesk
Updated: September 5, 2020, 02:14:01 PM
suntv roja serial roja arjun sun tv
suntv roja serial roja arjun sun tv : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அனாதை ஆசிரமத்தில் வளர்கிற பெண், ரோஜா. அங்கு ஒரு பிரச்னை ஏற்பட, அங்கிருந்து வெளியேறுகிறார். இவரது சிறு வயது உடை, போட்டோ உள்ளிட்டவற்றை அங்கிருந்து எடுத்துக்கொண்டு அன்னபூரணியிடம் அடைக்கலம் ஆகிறார் அனு. தன்னை அன்னபூரணியின் மகள் வயிற்றுப் பேத்தி என கூறிக் கொள்கிறார். அர்ஜூனுக்கு அனுவை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார் அன்னபூரணி.
இதற்கிடையே, கிரிமினல் லாயரான அர்ஜுன், தன்னிடம் கிளையன்டாக வந்த ரோஜாவை, ஒரு வருடத்துக்கு கான்டிராக்ட் போட்டு திருமணம் செய்துக்கொண்டு வீட்டுக்கு அழைச்சுட்டு வருகிறான். அனாதை ஆஸ்ரமத்தில் இருந்து வந்தவள் ரோஜா என்று அர்ஜுனின் பாட்டி அன்னபூரணி, அவங்க பொண்ணு யசோதா என்று யாருக்கும் பிடிக்கலை. என்ன இருந்தாலும் மருமகள் ஆயிற்றே… அதனால் கல்பனாவுக்கு ரோஜாவை பிடித்துப் போகிறது. இருப்பினும் ’நம்ம கல்யாணம் பண்ண நெனச்ச அர்ஜூனை இவள் பண்ணிக்கிட்டாளே’ என கிடைக்கும் கேப்பில் எல்லாம், ரோஜாவுக்கு எதிரான சதி வேலைகளில் இறங்குகிறாள் அனு.
இந்நிலையில், தற்போது ரோஜா சீரியல் ட்விஸ்ட்க்கு மேல் ட்விஸ்ட் என்று சென்று கொண்டிருக்கிறது. மிகப் பெரிய வில்லன் கும்பலை பிடிக்க களத்தில் இறங்கி இருக்கும் அர்ஜூன் – ரோஜா கதை இப்போது திசைமாறி சென்றுக் கொண்டிருக்கிறது. அர்ஜூன் – ரோஜா என்ன ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் எல்லோரிடமும். இதற்கிடையில் வில்லனுக்கு ரோஜாவை ஜோடியாக்க நினைக்கிறார் வில்லன் அம்மா. ஏற்கனவே கல்யாணம் ஆன ரோஜாவுக்கு இன்னொரு முறை நிச்சயதார்த்தமா?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil