ரோஜா சீரியலில் இருந்து விலகும் அனு.. இதுதான் காரணமா!

suntv serial news: கொரோனா சூழலை கருத்தில் கொண்டும் தான் கர்ப்பமாக இருப்பதாலும் ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக ரோஜா சீரியல் நடிகை அனு அறிவித்துள்ளார்.

Roja serial anu

Roja serial news: தமிழ் தொலைக்காட்சி சீரியல் தொடர்களிலேயே நம்பர் 1 இடத்தில் இருப்பது ரோஜா தான். இத்தொடரில் சிபு சூரியன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா நடிக்கிறார். இதில் முக்கியமான வில்லி கதாபாத்திரத்தில் அனுவாக அலற விட்டுக் கொண்டிருக்கிறார் ஷாமிலி சுகுமார். இந்த தொடரின் வெற்றிக்கு அர்ஜூன்-ரோஜா எவ்வளவு காரணமோ அந்த அளவிற்கு அனுவிற்கு முக்கிய பங்கு உண்டு. தனது பயங்கர வில்லத்தன நடிப்பால் ரசிர்களை கவர்ந்தவர்.

சீரியலில் தரமான வில்லியாக நடித்து ரசிகர்களிடையே அதிகம் திட்டு வாங்கினாலும் நடிப்பில் ஸ்கோர் பண்ணியுள்ளார். 2019ல் பெஸ்ட் வில்லி விருதும் வாங்கியுள்ளார். தற்போது 800 எபிசோடுகளை கடந்து சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஷாமிலி யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அவ்வபோது அதில் வீடியோக்களை பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருவார். சமீபத்தில் தனது பிரக்னன்சியை கணவருக்கு சர்ப்பரைஸ் ஆக சொல்லி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று யூடியூப் லைவில் வந்த அனு வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா சூழலை கருத்தில் கொண்டும் தான் கர்ப்பமாக இருப்பதாலும் ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக அனு அறிவித்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் நடிப்பை தொடர முடியவில்லை என கூறியுள்ளார். தொடர்ந்து லைவ்வில் ரசிகர்களின் கமெண்டுகளுக்கு பதில் அளித்த அவர், சீரியலில் சக நடிகர்களுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். சீரியல் முடிவடையாது என்றும் தன்னுடைய கேரக்டர் ரீப்லேஸ் செய்யப்படும் என்றார். யார் நடித்தாலும் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

குழந்தை பிறந்த பின்பு, கொரோனா நிலைமை சீரானதும் மீண்டும் சீரியலில் நடிப்பேன் என தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை சற்று நிம்மதியடைய வைத்துள்ளது. இனி யூடியூப் சேனலில் மேக் அப் டிட்டோரியல், ஹோம்டூர், ஃபிரிட்ஜ் டூர் மற்றும் பயனுள்ள வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன் என கூறியுள்ளார். ரசிகர்களின் திட்டுக்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் என ஷாமிலி கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv roja villi anu actress shamili sugumar quit serial

Next Story
Vijay TV Serial: அஞ்சலிக்கு திடீர் நெஞ்சுவலி… டாக்டராக வந்த வெண்பாவை தூண்டிவிடும் சாந்திbarathi kannamma, raja rani 2, barathi kannamma raja rani 2 serials mega sangamam, barathi kannamma serial update, பாரதி கண்ணம்மா - ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமம், raja rani 2 update, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, அஞ்சலிக்கு திடீர் நெஞ்சுவலி, வெண்பவை ஏத்திவிட்ட சாந்தி, sudden heartpain to anjali, shanthi provokes venba, venu, akil, saravanan, sandhya, senthil, soundarya, விஜய் டிவி சீரியல்கள், viay tv serials
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com