சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் நடிகை அகிலா. சென்னையை சேர்ந்தவர். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சீரியலில் அறிமுகமானார். இவர் சின்னத்திரையில் ரோஜாக்கூட்டம், சிவசக்தி, கோலங்கள், திருமதி செல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள் போன்ற பல சீரியல்களில் முக்கியமான அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தொடர்ந்து பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சரவணன், மனதோடு மழைக்காலம், கண்ணும் கண்ணும், பொல்லாதவன், அரசாங்கம், திருவண்ணாமலை, வேதா போன்ற பல படங்களில் தங்கை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Advertisment
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil