/tamil-ie/media/media_files/uploads/2021/04/kavin-venba.png)
சன் டிவியில் ரசிர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ள தொடர் சித்தி2. இந்த சீரியலில் பல கேரக்டர்கள் மாற்றப்பட்டாலும், ராதிகா விலகினாலும் அதே டிஆர்பியில் சென்றுக் கொண்டிருக்கிறது. கவின் வெண்பா இடையேயான ரொமான்ஸ், மற்றும் யாழினியின் வில்லத்தனம் என பரபரப்பாக கதை நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடரில் மிகப் பெரிய மாற்றம் நிகழப்போவதாக தகவல் வெளியானது.தொடர்ந்து புதிதாக ஒரு நபர் சித்தி 2 தொடரில் இணையவுள்ளதாக சன் டிவி சமூக வலைதளப்பக்கத்தில் தகவல் வெளியிட்டது.
கடந்த மூன்று நாட்களாக அது யார் என ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். தற்போது வெளியாகி இருக்கும் சன்டிவி ப்ரொமோவில் அது யார் என தெரியவந்துள்ளது. கவின் என்ற ரோலில் நடித்து வரும் நந்தன் லோகநாதன் தான் தற்போது இன்னொரு ரோலில் வரவுள்ளார். கவினின் தம்பி கதாபாத்திரம் நவின் தான் அது. தற்போது வெளிவந்திருக்கும் ப்ரொமோ வீடியோவில் அது காட்டப்பட்டு உள்ளது. முந்தைய எபிசோடில் வெண்பாவுடன் சண்டைப்போட்டுக்கொண்டு கடற்கரைக்கு கவின் செல்வது போல் முடிந்தது. இப்போது இரண்டு ரோல் என்பதால் என்ன நிகழும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
கவின் தான் டபுள் ஆக்ட் என்றால் யாழினிக்கு ஜோடியாக வரக்கூடாது சித்தி 2 வை புறக்கணிப்போம் என எமோஷனலாக கமெண்ட் போட்டு வந்த ரசிகர்கள் தற்போது ப்ரொமோவை பார்த்து ரிலாக்ஸ் ஆகி உள்ளனர். நெகட்டிவ் ரோலாக இல்லாமல் அதில் கவினுக்கு நவின் உதவி செய்வது போல உள்ளதால் viewers ஒரே ஹேபி தான்.ஒரு பக்கம் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் கவினின் டபுள் ரோல் யாழினிக்கு ஜோடியாக இருக்கக்கூடாது என ரசிகர்கள் புலம்புகின்றனர். இந்த உலகத்திலேயே வில்லிய satisfy பண்ண ஹீரோவ ஜெராக்ஸ் போட்டது நீங்கதான்னு சித்தி2 டைரக்டரை சமூக வலைதளங்களில் கலாய்த்து தள்ளுகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/WhatsApp-Image-2021-04-16-at-2.20.49-PM.jpeg)
வெண்பா கவின் ரொமன்ஸ் என கதை நகர்ந்து வந்த நிலையில் தற்போது டபுள் ரோல் ஆக்டிங்கில் என்னெவெல்லாம் நிகழப்போகிறதோ என today எபிசோடுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்…
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.