சமீபகாலமாகவே சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகர்களின் வீட்டில் பல சுப காரியங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் அனு கதாபாத்திரத்தில் நடித்த பிரதீபாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
Advertisment
சன் டிவியில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற தொடர் நாயகி. இந்த சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரதீபா முத்து. ஹீரோ திருவுக்கு தங்கையாகவும், அதே நேரத்தில் வில்லியாகவும் நடித்திருப்பார். இயல்பான வில்லத்தனமான பேச்சு, சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரதீபாவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
இந்நிலையில் சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் பிரதீபா தனது காதலரை திருமணம் செய்துள்ளார். மேலும், இவர்களுடைய திருமணம் குடும்பத்தினர் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தற்போது தங்கள் திருமணத்தில் எடுத்துள்ள புகைப்படத்தை நடிகை பிரதீபா அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil