சன்டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ரோஜா. இந்த தொடரின் நாயகி பிரியங்கா நல்காரி. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். டான்ஸரான இவர் முதன் முதலில் ‘அந்தாரி பந்துவையா’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து நா சாமி ரங்கா, ஹைப்பர் ,நேனே ராஜு நேனே மந்திரி போன்ற படங்களில் நடித்தார். பிறகு ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து வந்தார். தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்திருந்தார். காஞ்சனா 3 படத்தில் ஒரு கேரக்டர் ரோல் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் பிரியங்கா.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil