scorecardresearch

அர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கேயாவது போயிடுறேன்- ரோஜா

suntv serial roja udpate: ரோஜா பணத்திற்காக நாடகமாடுவதாக அனு மற்றும் யசோதா குற்றம் சுமத்துகிறார்கள்.

Tamil Serial News, Sun TV-Roja Serial
ரோஜா சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

ரோஜாவிற்காக சப்போர்ட் செய்யும் கல்பனாவிடம், புதுசா வந்த இந்த உறவு உனக்கு அவ்வளவு முக்கியமா போச்சு என சொல்கிறாள் அன்னப்பூரணி. அத்தை எதை எதோட இணைச்சு பேசுறீங்க, உங்களோட பேச்சு அடுத்தவங்களை எவ்வளவு காயப்படுத்துது தெரியுமா என கல்பனா சொல்லும் போது, எனக்கே அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டியா மருமகளே என கேட்கிறாள் அன்னப்பூரணி.

ரோஜா வந்ததுக்கு அப்புறம் தான் எல்லாம் பிரச்சனை, இதுனால தான் அர்ஜுன்க்கு அனுவை கல்யாணம் செய்து வைக்கலாம் என பார்த்தேன். ஆனா இவ வந்து என் பேரனை என்னை விட்டு பிரிச்சுட்டா, இவ வர்றதுக்கு முன்னாடி அர்ஜுன் என் பேச்சை கேப்பான் என அன்னப்பூரணி ரோஜா மீது குற்றம் சொல்கிறாள். அப்போது ரோஜா நான் இருக்குறது தானா உங்களுக்கு பிரச்சனை, நான் வீட்டை விட்டு போயிறேன் என சொல்கிறாள். உடனே அன்னப்பூரணி எதுக்கும்மா நீ வீட்டை விட்டு போற மாதிரி போவ, அதுக்கு அப்புறம் அர்ஜுன் வந்து என்னை திட்டி, உன்னை தேடி வந்து கூட்டிட்டு வருவான். அதுக்கு அப்புறம் மறுபடியும் இந்த வீட்ல பிரச்சனை வரும் என சொல்கிறாள்.

நான் அர்ஜுன் மாமா கண்ணுல படாத மாதிரி எங்கயாவது போயிறேன் என ரோஜா சொல்லும் போது, நீ மொத அர்ஜுன் மாமான்னு சொல்றதை நிப்பாட்டு என அனு சொல்கிறாள். அப்போது அனுவை அடிக்க பாயும் ரோஜா, நான் இந்த வீட்டை விட்டு போனாலும் உன்னை சும்மா விட மாட்டேன் என கூறுகிறாள். மேலும் இந்த வீட்டை பையா கணேஷ் கொலை வழக்குல இருந்து தப்பிக்க தானா இங்க உட்கார்ந்து இருக்க. அதுக்கான தண்டனையை நிச்சயம் அனுப்பவ என சொல்லிவிட்டு, பாட்டி ஒருநாள் இவளால உங்க உயிருக்கு ஆபத்து வரும், அப்ப நானும் அர்ஜுன் மாமாவும் தான் உங்களை காப்பாத்த வருவோம் என அன்னப்பூரணியிடம் சொல்கிறாள்.

ரோஜா பணத்திற்காக நாடகமாடுவதாக அனு மற்றும் யசோதா குற்றம் சுமத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் அர்ஜுன், இதுக்கு அப்புறம் நாங்க வீட்டை விட்டு போகணும்னா நான் அம்மா, அப்பா எல்லாரும் இந்த வீட்டை விட்டு போவோம் என சொல்கிறான். நீங்க மாப்பிள்ளை மாப்பிள்ளை சொல்றவர் உயிருக்கு போராடிட்டு இருக்காரு, டாக்டர் என்னை கூப்பிட்டு எதுக்கும் தயாரா இருங்கன்னு சொல்லிருக்காரு என அன்னப்பூரயிடம் சொல்கிறான். மாணிக்கம் அங்கிள் சரியாகி வரும் போது எல்லா உண்மையும் வெளிய வரும், அதுவரை அமைதியா இருங்க என அர்ஜுன் சொல்கிறான்.

இதனிடையில் பூஜாவை பொண்ணு பார்க்க வந்த புருஷோத்தமனின் தங்கச்சி கல்யாணம் விஷயம் பற்றி பேசுகிறாள். அப்போது ஜெயா, கிச்சனில் இருக்கும் அஸ்வினிடம் வந்து பேசுகிறாள். இதை கவனிக்கும் பூஜா, நீ எதுக்கு இங்க வந்த என கேட்டு ஜெயாவை திட்டி அனுப்புகிறாள். அதன்பிறகு புருஷோத்தமன் அஸ்வினிடம், மாப்பிள்ளைக்கு தூங்க ரூம் ரெடி பண்ணி கொடுக்க சொல்கிறான். அதனை தொடர்ந்து அன்னப்பூரணி சொன்னதை போன்று தன்னோட பெயரை சொல்லி கூப்பிட்டதாலே மாணிக்கத்திற்கு விபத்து நடந்ததாக எண்ணி அழுகிறாள். இத்துடன் நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Suntv serial roja udpate annapurani scolds roja manickam body condition