ஷாக் நியூஸ்… சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லாவுக்கு கொரோனா

Sundari serial news: சுந்தரி சீரியலில் நடித்து வரும் கேப்ரியெல்லா செல்லஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Sundari Gabriella Sellus Motivation Beauty Tips Tamil News

suntv serial news: தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பொது மக்கள் முதல் பிரபலங்கள் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் அன்பே வா சீரியல் நடிகை டெல்னாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது சுந்தரி சீரியல் கேபிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சுந்தரி. கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியும், அவள் தனது கனவை அடைய எப்படி போராடுகிறாள் என்பதை மையப்படுத்தியும் சீரியலின் கதை அமைந்துள்ளது.இந்த சீரியல் ஆரம்பித்த சில நாட்களிலேயே தாய்குலங்களின் மனங்களை கொள்ளையடித்தது. இதில் சுந்தரியாக நடித்து வரும் கேப்ரியெல்லா செல்லஸுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பல்வேறு திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது.

தனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கேபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் ரொம்ப சாதாரணமாக நினைச்சிடாதீங்க மாஸ்க் போடாம வெளிய போகாதீங்க. பாதுகாப்பாக இருங்க. கடைசியா எனக்கும் கோவிட் கன்ஃபார்ம் ஆயிடுச்சு என்று அவர் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதனால் சுந்தரி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேபிரியல்லாவின் இன்ஸ்டா பதிவுக்கு அவரது ஏராளமான ஃபேன்ஸ் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“நீங்க இல்லாம வேற யார் நடிச்சாலும் பார்க்கமாட்டோம், சீக்கிரமாக குணமாகி மீண்டும் நல்லபடியாக திரும்பி வருவீர்கள்” “இது போன்ற சமுதாய விழிப்புணர்வுக்கான பதிவுக்கு நன்றி” “போராட்டம் உங்களுக்கு புதிதல்ல மீண்டு வாருங்கள் அக்கா”என கமெண்ட் செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv sundari serial actress gabriella sellus tested positive

Next Story
மக்கு ரோபோட்? என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..!bigg boss, bigg boss fame shivani narayanan, shivani, bigg boss balaji, balaji celebrates shivani birthday, பிக் பாஸ், ஷிவானி நாராயணன், ஷிவானி, பாலாஜி, பிக் பாஸ் பாலாஜி, ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டம், ஷிவானி பாலாஜி புகைப்படம், மக்கு ரோபோட், வைரல் புகைபடம், makku robot shivani, balaji shivani photos goes viral
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express