Advertisment

அஜித்தை பின்னுக்குத் தள்ளிய விஜய் சேதுபதி!

தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், நிச்சயம் வசூலில் மாற்றம் ஏற்படும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Sethupathi - Ajith

Vijay Sethupathi - Ajith

கடந்தவாரம் வெளியாகி சாதாரண ரசிகணையும் சினிமா விமர்சகனாக்கிய திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

Advertisment

இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தையும் இந்தப் படம் பிடித்துள்ளது.

முன்பு $2,553,065 டாலருடன் பேட்ட முதல் இடத்திலும், $273,519 டாலர் வசூல் செய்த விஸ்வாசம் இரண்டாவது இடத்திலும் இருந்தது.

ஆனால் தற்போது சூப்பர் டீலக்ஸ், $376,839 டாலர் வசூலித்து, விஸ்வாசம் படத்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், நிச்சயம் வசூலில் மாற்றம் ஏற்படும்.

தவிர, 2.0, கபாலி ஆகியப் படங்களுக்குப் பிறகு வெளிநாடுகளில் அதிக வசூல் செய்திருக்கும் படம், ‘பேட்ட’ என்பது குறிப்பிடத்தக்கது!

Ajith Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment