Advertisment

super deluxe in Tamilrockers: ‘சூப்பர்’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்

Tamilrockers Leaked Vijay Sethupathi Starrer super deluxe Movie: சூப்பர் டீலக்ஸ் படத்தை ஆன் லைனில் வெளியிட்டு அதிர வைத்த தமிழ் ராக்கர்ஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
super deluxe box office collection

super deluxe box office collection

super deluxe Full Movie Leaked in Tamilrockers: விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தை நீதிமன்ற உத்தரவை மீறி தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

Advertisment

விஜய் சேதுபதி, திருநங்கையாக நடித்து வெளியாகியிருக்கும் படம், சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் சமந்தா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் நேற்று (மார்ச் 29) இந்தப் படம் ரிலீஸ் ஆனது.

super deluxe full movie in tamilrockers, சூப்பர் டீலக்ஸ், தமிழ் ராக்கர்ஸ் super deluxe full movie in tamilrockers: நீதிமன்ற உத்தரவை மீறிய தமிழ் ராக்கர்ஸ்

TamilRockers Leaked Super Deluxe Full Movie to Free Download: படக் குழுவினர் அதிர்ச்சி

சூப்பர் டீலக்ஸ் படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட திருட்டு இணையதளங்களில் வெளியிட தடை கேட்டு ஏற்கனவே படக் குழுவினர் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றமும் மேற்படி படத்தை பைரசி வெப்சைட்களில் வெளியிட தடை விதித்தது.

Read More: super deluxe Movie vs Tamilrockers: சூப்பர் டீலக்ஸ் தப்பியதா? தமிழ் ராக்கர்ஸ் அடங்குமா?

அதையும் மீறி பட ரிலீஸ் தினமான நேற்று இரவே இந்தப் படத்தை ஹெ.டி. தரத்துடன் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது. இந்தப் படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்வியூ வந்திருப்பதை தொடர்ந்து ரசிகர்கள் படத்தைக் காண ஆவலாக இருக்கிறார்கள். எனவே திருட்டுத்தனமாக இந்தப் படத்தை இணையதளத்தில் வெளியிட்டிருப்பது, படக் குழுவினருக்கு நஷ்டத்தை உருவாக்கும் என்றே தெரிகிறது.

இணையதளங்களில் புதுப் படங்களை தேடி, சினிமா ரசிகர்கள் மொய்க்கும் வரை இது போன்ற திருட்டு ரிலீஸ்களை தடுக்க முடியுமா? என்பதும் கேள்விக்குறியே!

Vijay Sethupathi Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment