Advertisment

Super Deluxe: பாலிவுட்டுக்குப் பறக்கும் சூப்பர் டீலக்ஸ்!

Super Deluxe: சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்தியில் இயக்குகிறாராம் தியாகராஜன் குமாரராஜா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Sethupathi super deluxe, விஜய் சேதுபதி

Vijay Sethupathi super deluxe, விஜய் சேதுபதி

Super Deluxe: கடந்த மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

Advertisment

தேசிய விருது வென்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இதனை இயக்கியிருந்தார். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், பகவதி பெருமாள், காயத்ரி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தார்கள்.

யுவனின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருந்தது. படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இதனை பாலிவுட் பிரபலங்கள் அனுராக் கஷ்யாப், விக்ரமாதித்யா மோத்வானி போன்றோர் சூப்பர் டீலக்ஸ் படத்தை வெகுவாகப் பாராட்டியிருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அணுகியிருக்கிறாராம். உறுதியாகும் பட்சத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தை இந்தியில் இயக்குகிறாராம் தியாகராஜன் குமாரராஜா.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

 

Samantha Ruth Prabhu Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment