சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் ராஜலட்சுமி ஜோடி தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், ராஜலட்சுமி நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
மேடை கச்சேரிகளில் நாட்டுப்புற பாடல்கள் பாடி சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமான ஜோடி செந்தில் கணேஷ் ராஜலட்சுமி. இவர்களின் என்ன மச்சான் சொல்லு புள்ள என்ற பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டியை கிளப்பியதை தொடர்ந்து இந்த ஜோடிக்கு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், இருவரும் சிறப்பாக பாடி பாராட்டுகளை பெற்றாலும் பாதியிலேயே ராஜலட்சுமி வெளியேறினார். ஆனால் விடா முயற்சியாக திறமையை வெளிப்படுத்திய செந்தில் கணேஷ் முதல் பரிசான வீட்டை தட்டிச்சென்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர்கள் தற்போது சினிமாவில் பாடல் பாடி வருகின்றனர்.
Advertisment
Advertisements
இதில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் ராஜலட்சுமி குரலில் இடம்பெற்ற வாயா சாமி பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே செந்தில் கணேஷ் கரிமுகன் என்ற ஒரு படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது இருவரும் இருளி என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜலட்சுமி தற்போது லைசென்ஸ் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை கணபதி பாலமுருகன் என்பர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர் ராதா ரவி முக்கிய கேரக்டரில் நடித்துள்’ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய நடிகர் ராதா ரவி, இந்த படத்தின் இயக்குனரை நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவ்வளவு தைரியமாக ஒரு கதையை எடுத்து இருக்கிறார். அதுவும் இந்த கதைக்கு ராஜலட்சுமியை தேர்வு செய்திருக்கிறார். அதுதான் டாப். வேறு யாராக இருந்தாலும் வேறு நடிகைகளை தேர்வு செய்திருப்பார்கள் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஓபன் செய்தார்கள். ராஜலட்சுமி போட்டோவை போட்டால் வியாபாரம் ஆகிடுமா? ரஜினி சார் முகத்தை போட்டாலே இழுக்குது ஆனால் ராஜலட்சுமி முகத்தை தைரியமாக போட்டிருக்கிறதார்கள். அதை பாராட்டுகிறேன்.
இந்த கதைக்கு ஏற்ற ஒரு அற்புதமான கதாநாயகி குத்து விளக்கு ஏற்றிய போது கூட அவரது கணவரை அழைத்தார். இது முதல் படம் அம்மா. அடுத்த படத்திற்கெல்லம் அவரை கூப்பிட்டுக்கொண்டு வருவராதே. தொல்லை. உன் கணவரை அழைத்து வந்தால் பாதுகாப்பு என்று நீ நினைக்கிறாய். ஆனால் நீதான் உன்னுடைய பாதுகாப்பு என்று கூறியுள்ளார். ராதாரவியின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“