Advertisment

சூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்

ஜெய் நடித்த ’வடகறி’ படத்தில் ’நெஞ்சுக்குள்ள நீ’ என்ற பாடலை விஜய் பிரகாஷுடன் இணைந்து பாடியிருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
super singer diwakar marriage

super singer diwakar marriage

Singer Diwakar Married with Abi : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ‘சூப்பர் சிங்கர்’ மிகவும் பிரபலமானது. தமிழ் சினிமாவில் பல பின்னணிப் பாடகர்களை இந்நிகழ்ச்சி உருவாக்கியுள்ளது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீசன் 4-ல் சக போட்டியாளர்களுக்கு கடும் போட்டியைக் கொடுத்து, டைட்டில் வென்றவர் திவாகர்.

இவர் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துக் கொள்கவதற்கு முன், பல முன்னணி  தொலைக்காட்சிகளின் இசைப்போட்டியில் கலந்துக் கொண்டுள்ளார்.  ராஜ் டிவி நடத்திய "வாய்ஸ் ஆப் தமிழ்நாடு" என்ற இசை போட்டியில் இரண்டாமிடம் பிடித்த திவாகர், சன் டிவியில் நடந்த சங்கீத மகாயுத்தம் மற்றும் ஜெயா டிவியில் ஹரியுடன் நான் போன்ற பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னை கூர்தீட்டிக் கொண்டார்.

முதலில் ஜெய் நடித்த ’வடகறி’ படத்தில் ’நெஞ்சுக்குள்ள நீ’ என்ற பாடலை விஜய் பிரகாஷுடன் இணைந்து பாடியிருந்தார். இதற்கிடையே திவாகருக்கும் அபி என்பவருக்கும் கடந்த 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் கலந்துக் கொண்ட ’கலக்க போவது யாரு’ புகழ் தங்கதுரை மற்றும் அமுதவானன் இருவரும் மணமக்களுக்கு கொசு பேட்டை பரிசாக வழங்கி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார். அதோடு பின்னணி பாடகர் அந்தோணி தாசன் வெங்காயத்தை பரிசாக வழங்கினார். இதனால் மேடையில் சிரிப்பு வெடித்தது.

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment