ராதாரவி சொன்னதால் என் வீட்டுக்காரரை கூட்டிட்டு வரலை என தான் கதாநாயகியாக நடிக்கும் லைசென்ஸ் இசை வெளியீட்டு விழாவில் ராஜலெட்சுமி கூறினார்.
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதி. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேடைகளில் நாட்டுபுற பாடல்கள் மூலம் மக்களிடம் வரவேற்பு பெற்றவர்கள், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் இணைந்தும், தனித்தனியாகவும் திரைப்படங்களில் பாடல்கள் பாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: ‘இளையராஜா இசை அமைத்ததாக நீங்க நினைக்கும் பல பாடல்கள் நான் இசை அமைத்தவை’: அதிர வைக்கும் கங்கை அமரன்
இதுதவிர செந்தில் கணேஷ் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி ராஜலெட்சுமி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். கே.ஆர்.ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் லைசென்ஸ் என்ற படத்தில் ராஜலெட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ கருப்பையா, அபி நட்சத்திரா, வையாபுரி, நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் உரையாற்றிய ராஜலெட்சுமி, எனக்கு இவ்வளவு பெரிய இடம் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. டைட்டில் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது என்னுடைய கணவர் செந்தில் கணேஷ் வந்திருந்தார். அப்போ விளையாட்ட ராதாரவி அப்பா சொன்னாங்க, அடுத்த தடவை வரும்போது வீட்டு காரரை எல்லாம் கூட்டிட்டு வரக்கூடாது என சொன்னார். இன்றைக்கு எதார்த்தமாகவே என்னுடைய வீட்டுக்காரர் வரலை. இதப்பத்தி நீங்க எதுவும் தப்பா நினைச்சிக்க வேண்டாம் என சிரித்தவாறே கூறினார்.
நாங்கள் மேடைக் கலைஞர்கள் அதுதான் எங்கள் பிரதானம், அடையாளம். மே மாதம் என்பது மேடை கலைஞர்களுக்கு பிசியான மாதம். 30 நாட்களும் நிகழ்ச்சி இருக்கும். இன்றைக்கு காலையில் ஒரு நிகழ்வு, அது அவர் இருந்த தான் சமாளிக்க முடியும், அதனால் என்னை சூப்பரா பண்ணிட்டு வா என வாழ்த்தி, அவர் அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்.
எனக்கு பெரிய சர்போர்ட்டாக இருக்கும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. என்னுடைய அனைத்து முன்னேற்றங்களிலும் உடன் இருக்கும் என்னுடைய நண்பர்களுக்கு நன்றி. கிராமப் புறங்களில் நாட்டுபுற பாடல்களை பாடிக் கொண்டிருந்த ராஜலெட்சுமியை வைத்து படம் எடுக்க நினைத்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. என்னுடைய வளர்ச்சிக்கு மீடியாக்களும் காரணம். இவ்வாறு ராஜலெட்சுமி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil