செந்தில் கணேஷ் : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ், நடிகர் சூர்யாவிற்கு அறிமுக பாடலை பாடியுள்ளார்.
கடந்த 6 மாதங்களாக நடந்து வந்த சூப்பர் சிங்கர் சீசன் 5 நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் தனது நாட்டுப்புற பாடல்களால் பெரும் ஆதரவை பெற்றிருந்த செந்தில் கணேஷ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சினிமா பாடல்களை நம்பி களத்தில் குதித்த போட்டியாளர்கள் மத்தியில், நாட்டுப்புறப்பாடல்கள் பாடி தனக்கென தனி ரசிகர்களை சம்பாதித்த அவர், பலருக்கும் பிடித்தமான போட்டியாளராக இருந்துள்ளார். .புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி இருவருக்கும் சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
செந்தில் கணேஷ் அறிமுகம்:
சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடுவதற்கு வாய்ப்பளிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி வெற்றியாளரான செந்திலுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவது மேடையில் உறுதியானது.
Finally its confirmed.
Writer @gnanakaravel‘s opening song for @anavenkat @Jharrisjayaraj @Suriya_offl na’s @Suriya37_Movie recorded. Sung by
Airtel super singer #SenthilGanesh pic.twitter.com/vNfWIQZLbc— Vishnu Surya (@VishnuMankara) 31 July 2018
#SeemaRaja song Recording ! #SenthilGanesh ???????? pic.twitter.com/J3P2gyj4lz
— PrinceSk Online SkFc (@Online_SkFc) 23 July 2018
ஆனால், அதற்குள் திரைப்பட பாடகராக செந்தில் இமான் இசையில் அறிமுகமானர் .இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில், அறிமுகப் பாடலைப் பாடியிருக்கிறார் செந்தில். இதற்கான பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.