/indian-express-tamil/media/media_files/SrRN5ADVCDkFEIq0sz3g.jpg)
சூப்பர் சிங்கர் சீசன் 10-ல் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜீவிதா
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 10-ல் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜீவிதா, ஒரு பேட்டியில், இன்ஸ்டாகிராமில் தனக்கு வந்த மெசேஜ்ஜில், உங்க வீடு எங்க இருக்கு பொண்ணு கேட்டு வர்றோம்னு சொல்றாங்க என்று ஓபனாக பேசியுள்ளார்.
பாடும் திறமையுள்ள பலரும் தங்கள் குரல், விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒலிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று 10வது சீசன் வரை வந்துள்ளது.
அண்மையில், சூப்பர் சிங்கர் சீசன் 10 கிராண்ட் ஃபினாலேவில் ஜான் ஜெரோம் என்ற இளைஞர் டைட்டிலை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஜீவிதா 2வது இடத்தைப் பிடித்தார். வைஷ்ணவி 3வது இடத்தைப் பிடித்தனர்.
சிறிய வயதில் இருந்தே கர்நாடக இசை, செவ்வியல் இசை என முறையாக இசை பயின்ற போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், இயல்பான இசை ஆர்வத்தின் மூலம் பாடத் தொடங்கி சூப்பர் சிங்கர் சீசன் 10-ல் டைட்டிலை வென்ற ஜான் ஜெரோம் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜீவிதா இருவரும் பாராட்டுதல்களைப் பெற்றனர்.
சூப்பர் சிங்கர் சீசன் 10-ல் டைட்டிலை வென்ற ஜான் ஜெரோம் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்த ஜீவிதா இருவரும் ஒரு யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்துள்ளனர். அதில் பேட்டி எடுப்பவர், ஜான் ஜெரோம் இடம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குப் பிறகு, உங்களுடைய இன்ஸ்டா அக்கவுண்ட்டுக்கு நிறைய காதல் புரொபஸல் வந்திருக்கும் இல்லையா என்று கேட்கிறார். அதற்கு ஜான் ஜெரோம், அப்படி எதுவும் இல்லை எல்லாமே அண்ணா, தம்பி என்றுதான் சொல்வார்கள் என்று கூறினார்.
அதே போல, சூப்பர் சிங்கர் சீசன் 10 ரன்னர் அப் ஜீவிதா இடம் உங்களுக்கு நிறைய புரோஃபசல் வந்திருக்கும் இல்லையா, அதில் ஏதாவது ஒன்று சொல்லுங்கள் என்று நேர்காணல் எடுப்பவர் கேட்கிறார். அதற்கு, ஜீவிதா, தனக்கு இன்ஸ்டாகிராமில் ஒருவர் அனுப்பிய மெசேஜ்ஜில், உங்க வீடு எங்க இருக்கு வந்து பொண்ணு கேட்கிறோம் என்று மேசேஜ் வந்திருத்தது என்று ஓபனாகப் பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.