விஜய் டிவியில் எவ்வளவோ சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும், பெரும்பாலான ரசிகர்களின் ஃபேவரைட் காமெடி ஷோவாக இருக்கும், அல்லது சிங்கிங் ஷோவாக இருக்கும்.
விஜய் டிவியை அலங்கரிக்கும் நாயகிகள் - ஸ்பெஷல் ஃபோட்டோ கேலரி
இப்போது, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7 வரும் பிப்.22 முதல் தொடங்கவுள்ளது. ஆண்கள் சீரியல் ப்<பார்க்க ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால், சூப்பர் சிங்கர் ஷோவுக்கு ஆண், பெண், குழந்தைகள் பாகுபாடின்றி அனைவரும் ரசிகர்களாக இருப்பார்கள்.
விஜய் டிவி, சீசன் செவனுக்கான புரமோவை கடந்த சில நாட்களாகே ஒளிபரப்பி வந்தது. அந்த புரமோவே ரசிகர்களிடம் பெரிதாக ரீச்சாகி உள்ளது. குறிப்பாக, அதில் நடித்த சிறுமியின் க்யூட் எக்ஸ்பிரஷன்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
சூப்பர் சிங்கர் சீசன் 7-ஐ மாகப ஆனந்த், பிரியங்கா தொகுத்து வழங்க உள்ளனர்.
ஷங்கர் மகாதேவன், சித்ரா, கல்பனா, நகுல் ஆகியோர் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சீசனில் மொத்தம் 20 சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கின்றனர்.
’ரஜினியின் மாஸான டி.வி அறிமுகம்’ : மோஷன் போஸ்டரை வெளியிட்ட பியர் கிரில்ஸ்