’ரஜினியின் மாஸான டி.வி அறிமுகம்’ : மோஷன் போஸ்டரை வெளியிட்ட பியர் கிரில்ஸ்

40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் நான், டிவியில் அறிமுகமாக ஒப்புக்கொண்டேன்.

By: February 19, 2020, 5:26:21 PM

Superstar Rajinikanth : கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடந்த மேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் நடிகர் ரஜினி பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் , நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலிலேயே இனி சைக்கிள் ஓட்டலாம் – ஜாலி ரைடுக்கு நீங்க ரெடியா?..

ட்விட்டரில் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கிரில்ஸ், “ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் டிவி அறிமுக நிகழ்ச்சிக்கு அறிமுகமாகிக் கொண்டிருக்கிறேன். உலகளவில் பல நட்சத்திரங்களுடன் பணி புரிந்திருக்கிறேன். ஆனால் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்தியாவுக்கு எனது அன்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு ட்வீட்டில், “தனி ஸ்டைலை உடையவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் காடுகளில் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. அவருடன் நேரத்தை செலவிட்டு, பல விஷயங்களை தெரிந்துக் கொண்டது, முற்றிலும் புதிதாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிா் வாழும் முறைகளை உணா்த்தும் வகையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளாா். குறிப்பாக நீா்வளப் பாதுகாப்பு பற்றி அவா் இந்த நிகழ்ச்சியில் பேசுகிறாா். ரஜினிகாந்த் அடா்ந்த காடுகளில் பயணம் செய்யும் போது, இயல்பான சண்டைக் காட்சிகள், திரையில் அவா் பேசுவது போன்ற பஞ்ச் வசனங்கள், சிறுவா்களுடன் சந்திப்பு என பல சுவாரஸ்ய பகுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், கியாரா அத்வானி, சன்னி லியோன் ‘ஃபையரிங்’ படங்கள்!

இது குறித்து ரஜினிகாந்த், “இன்டூ தி வைல்ட் என்பது உண்மையிலேயே தனித்துவமான நிகழ்ச்சி. சமூகத்தின் பெரிய நன்மைக்கான நோக்கத்தைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்குகளை வழங்குவதற்காக,  உலகளவில் மதிக்கப்படும் டிஸ்கவரி என்ற பிராண்டின் அதிகாரிகள் என்னை அணுகியபோது, 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் நான், டிவியில் அறிமுகமாக ஒப்புக்கொண்டேன். எனது குரு கே.பாலசந்தர் அவர்களால் நிறுவப்பட்ட தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவும் இதில் குறிப்பிடத் தகுந்த பங்கை கொண்டுள்ளது” என்று முன்பு தெரிவித்திருந்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Rajinikanth into the world with bear grylls

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X