சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகா சுந்தர், தன்னை விட வயது குறைவானவரை திருமணம் செய்துகொள்வதாக கூறியதோடு, வயதை விட ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்வது தான் முக்கியம் என கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
விஜய் டிவியின் மிக முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். இதுவரை 8 சீசன்கள் வெளியாகியுள்ள இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஜூனியர், சீனியர் என்று பல வருடங்களாக ஒளிப்பரப்பி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு இசைப்பிரியர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சூப்பர் சிங்கரின் தற்போதைய சீசன் 8, சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது.
இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா சுந்தர். இவர் பாடலுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு வந்தது. அது மட்டும் இல்லாமல் மாளவிகா தமிழில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல் ஹிந்தியிலும் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை சென்றார். ஆனால், மாளவிகா அதில் வெற்றி பெற முடியவில்லை. மாளவிகா விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆஃப் சாம்பியன் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு, பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாளவிகா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/250840348_174853164835037_9164618260338753389_n1.jpg)
தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு மாளவிகா பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், உங்கள் கணவர் உங்களை விட வயதில் சிறியவரா? இல்லை நீங்கள் சிறியவரா? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மாளவிகா, என்னைவிட அவர் ஒரு வருடம் இளையவர், அவருக்கு முப்பத்தி இரண்டு வயது ஆகிறது என்று கூறியிருக்கிறார். அப்போது மற்றொரு ரசிகர், இரண்டு உறவுகளுக்குள் இருக்கும் வயது வித்தியாசத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பெண்ணை விட பையன் வயது அதிகமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை பிரச்சினை கிடையாது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும். மரியாதை இருக்கவேண்டும் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.
மற்றொருவர், உங்களை வயது குறைவானவரை திருமணம் செய்ய உங்கள் பெற்றோரை எப்படி சம்மதிக்க வைத்தீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு கல்யாணம் ஆகாதனு ரொம்ப வருஷமா காத்திருக்காங்க, இப்ப ஒரு பையனை பிடிச்சிருக்குனு சொன்னதும் பண்ணிரலாம்னு சொல்லிட்டாங்க என்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil