scorecardresearch

அடையாளம் தெரியாமல் மாறிய பூவையார்: மாஸ் லுக்கில் வெளியான விஜய் டி.வி ஃபங்க்ஷன் போட்டோ

விஜய் டிவியின் விஜே பிரியங்கா தொகுப்பாளினியாக 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

அடையாளம் தெரியாமல் மாறிய பூவையார்: மாஸ் லுக்கில் வெளியான விஜய் டி.வி ஃபங்க்ஷன் போட்டோ

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பூவைாரின் சமீபத்தில் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஏராளமான இளம் பாடகர்களை கொடுத்த விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பூவையார். இந்த நிகழ்ச்சியில் ரன்னர்அப் வாங்கிய அவர், 2019-ம் ஆண்டு வெளியான கொரில்லா படத்தில் பாடல்பாடி திரையுலகில் பாடகராக அறிமுகமானார்.

தொடர்ந்து அதே ஆண்டு விஜயின் பிகில் படத்தில் வெறித்தனம் என்ற பாடலை பாடி அதில் நடித்தும் இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து பல படங்களில் பாடல்கள் பாடினார். அதே சமயம் மாஸ்டர். கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் கோப்ரா மற்றும் அந்தகன படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதனிடையே விஜய் டிவியின் விஜே பிரியங்கா தொகுப்பாளினியாக 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக விஜய் டிவி பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.

அந்த வகையில் பூவையாரும் வருகை தந்து தொகுப்பாளினி பிரியங்காவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு பூவையாரை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு வளர்ந்து விட்டாரே என்று ஆச்சரியத்துடன் அவரின் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Super singer pooviyar new look viral in bb jodigal show on social media