விஜய் டி.வி ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 10-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சி மூலம் பல பாடகர்களும் உருவாகி உள்ளனர். முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, இமான் ஆகியோர் இசையிலும் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் பாடியுள்ளனர்.
இந்நிலையில், 2012 ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 9 சீசன் மூலம் அறிமுகமானவர் பிரியா ஜெர்சன். அசத்தலான திறமை, அழகிய குரல் கொண்ட பிரியா ஜெர்சன் 9வது சீசனின் முதல் ரன்னர் அப் பட்டத்தை தட்டிச் சென்றார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும் இவரின் நீண்ட நாள் காதலரான சார்லி ஜாய்க்கும் அண்மையில் திருமண நிச்சயதார்தம் நடந்த நிலையில் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இவரின் திருமண வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“