super singer rajalakshmi senthil rajalakshmi songs
super singer rajalakshmi senthil rajalakshmi songs : விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. இந்த சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி தங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்கள்.
Advertisment
இவர்களின் பிளஸே இவர்களே பாடலை எழுதி, அதை பாடுவது தான். இந்த சீசனில் ராஜலட்சுமியை விட செந்திலுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். இறுதி டைட்டிலையும் அவரே அடித்தார்.
அந்த நிகழ்ச்சியில் சம்பாதித்த பேரு, புகழ் இருவரையும் எங்கையோ கொண்டு போகியது. வீடு, வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி, தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்கள் என இருவரும் பிஸியாகினர். செந்தில் -ராஜலட்சுமி திருமணம் காதல் திருமணம் ஆகும்.
எந்த டிராமா குரூப்பும், எந்த சட்டமும்….” வைரலாகும் வனிதா விஜயகுமார் பதிவு கிராமத்து பின்னணியில் இருந்து வந்த இருவரும் எப்போதும் வேட்டி சட்டை, கண்டாங்கி சேலையில் ஜொலிப்பது தான் வழக்கம். ஆனால் சமீபத்தில் இருவரும் சர்ச்சையில் சிக்கியது சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
Advertisment
Advertisements
இந்த நிலையில், கிராமிய பாடகி மதுரமல்லி என்பவர் எழுதி பாடிய ' மாமான்னு கூப்பிடத்தான்' என்ற பாடல் பிரபலமாகி இதுவரை 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இப்பாடலுக்கு ராஜலட்சுமி சொந்தம் கொண்டாடி மேடையில் பேசியதால், பாடகி மதுரமல்லி குற்றம் சாட்டியுள்ளதுடன், தற்கொலை செய்ய முயற்சிப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அண்மையில் ஒரு கிராம நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜலட்சுமி, 'மாமான்னு கூப்பிடத்தான்' பாடலை எனது தங்கை கலைவாணி பாடியதாகவும், எங்கு சென்றாலும் கலைவாணி வரவில்லையா என்று மக்கள் கேட்பதாகவும் மேடையில் கூறினார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாடகி மதுரமல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டு நியாயம் கேட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ள ராஜலக்ஷ்மி தன்னுடைய யூடுயூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய தங்கை எழுதி வெளியிட்டுள்ளார். பக்தி பாடலுக்கு கொடுத்த அறிமுகத்தை யாரோ ஒருவர் மாமான்னு கூப்பிடத்தான் மனசு சொல்லுது பாடலை பாடுவதற்கு முன் பேசியது போல எடிட் செய்து உள்ளனர். நான் எந்த தவறையும் செய்யவில்லை, எங்கள் மீது வந்த புகாருக்கு எங்கள் பக்கத்தில் இருக்கும் பதில் தான் இது. யாருக்கும் பயந்தோ, மன்னிப்பு கேட்கவோ இந்த வீடியோ தான் இது என்று கூறியுள்ளார்