scorecardresearch

இப்படியெல்லாம் பண்ணலாமா பயந்துபோன டி.ஜே.பிளாக்: அப்படி என்ன நடந்தது?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனைவரையும் சரியான பின்னிசை போட்டு காமெடி செய்யும் டி.ஜே.பிளாக்கை சூப்பர் சிங்கர் டீம் கலாய்த்துள்ளது.

இப்படியெல்லாம் பண்ணலாமா பயந்துபோன டி.ஜே.பிளாக்: அப்படி என்ன நடந்தது?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனைவரையும் சரியான பின்னிசை போட்டு  காமெடி செய்யும் டி.ஜே.பிளாக்கை சூப்பர் சிங்கர் டீம் கலாய்த்துள்ளது.

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 9 இப்போது நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மா.கா.ப தொகுத்து வழங்குகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில், சூழலுக்கு தகுந்தாற்போல், பின்னணி இசையை டி.ஜே. பிளாக்  போடுவார். இதன் மூலம் அவர் அடிக்கடி பிரியங்காவை கலாய்ப்பார். இந்நிலையில் சிலருக்கு  மட்டும அவர் காதல் கசியும் பின்னணி  இசையை  போடுவார். அந்த வரிசையில் சமீபகாலமாக, போட்டியாளர் புஜாவுக்கு அவர் போடும் பின்னணி பாடல் அதிக பிரபலம்.

இந்நிலையில் இதுபோன்ற பாடல் போடுவது தவறு என்றும் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதாக, புஜாவின் உறவினர் ஒருவர் பேசும் புரோமோ வெளியானது. இந்த புரோமோ அதிக வைரல் ஆனது.

இதனால் அதிகம் பேர் சூப்பர் சிங்கர் சீசன் 9 எபிசோடை பார்த்தார்கள். இந்நிலையில் உண்மையாக டி.ஜே.பிளாக்கை அவர்கள் விமர்சிக்கவில்லை. நிகழ்ச்சிக்காக அவரை கலாய்த்தனர் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் டி.ஜே. பிளாக் இந்த பிராங்கால் பயந்து போனார் என்பது குறிப்பிடதக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Super singer season 9 dj black pooja mother issue